தமிழ்நாடு

tamil nadu

தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10பேர் காயம்

By

Published : Mar 15, 2021, 12:33 PM IST

திருநெல்வேலி: தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.

thirunelveli road accident
தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயம்

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் இருந்து பயணிகளுடன் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு சென்ற தனியார் பேருந்து, மூலைக்கரைப்பட்டி அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.

அப்போது, பேருந்திற்குள் சிக்கியிருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், அவர்களை மீட்டனர். தொடர்ந்து, மூலைக்கரைப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் காயம் அடைந்தவர்களை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து மூலைக்கரைப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பார்சல் சேவைகளை நவீனமயமாக்கும் ரயில்வே: பயணிகள் ரயில்களில் பார்சல் வேன்கள் இணைப்பு

ABOUT THE AUTHOR

...view details