தமிழ்நாடு

tamil nadu

தேனியில் குடிநீர் தட்டுப்பாடு... குள்ளபுரம் கிராம மக்கள் கோரிக்கை...

By

Published : Sep 27, 2022, 8:24 PM IST

தேனி அருகே குடிநீர் பற்றாக்குறையை போக்க குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் நீர் நிரப்பி குடிநீர் விநியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க குள்ளபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க- ஊராட்சி நிர்வாகத்திடம் குள்ளபுரம் கிராம மக்கள் கோரிக்கை
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க- ஊராட்சி நிர்வாகத்திடம் குள்ளபுரம் கிராம மக்கள் கோரிக்கை

தேனி:பெரியகுளம் அருகே உள்ள குள்ளபுரம் ஊராட்சியில் மக்களின் குடிநீர் தேவையை போக்குவதற்காக 60,000 லிட்டர் குடிநீர் திட்டத்திற்காக தேனி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் நிதியிலிருந்து ரூ.14 லட்சம் செலவில் 2019 - 2020 ஆண்டு நிதியில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டது.

இந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி பணிகள் கரோனா காரணமாக 2021 ஆண்டு இறுதியில் தாமதாமாக முடிந்தன. அதன்பின் ஓராண்டு ஆகியும் இதுவரையில் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் நீர் நிரப்பி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட வில்லை.

இதனால் குள்ளபுரம் ஊராட்சி கிராம மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் நீர் நிரப்பி விநியோகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:’காந்தி ஜெயந்தி கொண்டாட ஆர்எஸ்எஸ்க்கு உரிமை உண்டு’ - தமிழிசை சௌந்தரராஜன்

ABOUT THE AUTHOR

...view details