தமிழ்நாடு

tamil nadu

வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By

Published : Oct 17, 2022, 10:48 PM IST

தேனி சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தேனி:சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவு எட்டி ஏற்கனவே உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், பெரியகுளம் பகுதியில் உள்ள கல்லாறு, கும்பக்கரை ஆறு, செலும்பாறு, உள்ளிட்ட ஆறுகளில் வரும் நீர் பெரியகுளம் வராக நதி ஆற்றில் கலந்து செல்வதால் மாலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சோத்துப்பாறை அணையில் இருந்து வெளியேறும் நீர் மற்றும் கிளை ஆறுகளான கல்லாறு, கும்பக்கரை ஆறு, செல்லும்பாறு உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நீர் அனைத்தும் வராக நதி ஆற்றில் கலக்கும் பொழுது 1000 கன அடிக்கும் மேல் வராக நதி ஆற்றில் நீர் செல்லும் நிலை உள்ளது.

வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

இதனால் வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்களம், மேல்மங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கரையோர கிராம மக்களுக்கு வராகநதி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:Congress Election Vibes - கார்கே Vs தரூர் வெல்லப்போவது யார்?

ABOUT THE AUTHOR

...view details