தமிழ்நாடு

tamil nadu

சொத்துத் தகராறு: தந்தையைக் கொன்ற மகன்

By

Published : Mar 20, 2021, 10:36 PM IST

தேனி: சுரண்டை அருகே சொத்துத் தகராறில் தந்தையை, மகனே கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து தகராறு- தந்தையை கொலை செய்த மகன்
சொத்து தகராறு- தந்தையை கொலை செய்த மகன்

தேனி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீராணம் மெயின் ரோடு காலனியைச் சேர்ந்தவர் சுடலையாண்டி (70). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மனைவி அன்னலட்சுமி கடந்த 15 ஆண்டுக்கு முன்பு உயிரிழந்தார்.

அன்னலட்சுமிக்குச் சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால்தான், தயார் இறந்துவிட்டதாக மூத்த மகன் பெருமாள் (42) மன வருத்தத்தில் இருந்துவந்துள்ளார்.

இன்னும் திருமணமாகாத பெருமாள், கடந்த சில மாதங்களாகவே தனக்குரிய சொத்தை எழுதித் தருமாறு தந்தை சுடலையாண்டியிடம் தகராறு செய்துவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம்போல் தனக்கு தரவேண்டிய சொத்தை எழுதித் தருமாறு இன்று காலை (மார்ச் 20) பெருமாள் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளதில் ஆத்திரத்தில், பெருமாள் வயலில் வைத்து அரிவாளால் தந்தையை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுடலையாண்டி உயிரிழந்தார்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சுடலையாண்டி உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பெருமாளைக் கைதுசெய்த காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details