தமிழ்நாடு

tamil nadu

வீரபாண்டிய கட்டபொம்மனின் 262ஆவது பிறந்தநாள்: ஓபிஎஸ் மரியாதை!

By

Published : Jan 3, 2021, 1:20 PM IST

தேனி: வீரபாண்டிய கட்டபொம்மனின் 262ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் 262வது பிறந்தநாள்
வீரபாண்டிய கட்டபொம்மன் 262வது பிறந்தநாள்

ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்து அவர்களுடன் போரிட்ட பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரது 262ஆவது பிறந்த தினமான இன்று (ஜன.3) தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் உள்பட பலர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, தேனி மாவட்டம் போடியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு மரியாதை செலுத்திய ஓபிஎஸ்!

போடி - மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரண்மனை அருகில் அமைந்துள்ள கட்டபொம்மனின் திருவுருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து, கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் உள்பட அதிமுகவினர் பலரும் மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க:வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் மதுரைக்கும் உள்ள தொடர்பு இதுதானா!

ABOUT THE AUTHOR

...view details