தமிழ்நாடு

tamil nadu

தேனி - போடி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நிறைவு!

By

Published : Dec 9, 2022, 4:47 PM IST

தேனி முதல் போடி வரையிலான ரயில் பாதையில் தண்டவாளத்தின் உறுதித் தன்மையை கணக்கிட அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

தேனி - போடி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்!
தேனி - போடி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்!

தேனி முதல் போடிநாயக்கனூர் இடையே, அகல ரயில் பாதைக்கான பணிகள் முடிவு பெற்று ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே கடந்த வாரம் போடிநாயக்கனூர் முதல் தேனி வரையிலான 15 கிலோமீட்டர் தூரத்தை, 120 கிலோமீட்டர் வேகத்தில் ஒன்பது நிமிடங்களில் கடந்து ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று (டிச.9) போடி முதல் தேனி வரையிலான அதிநவீன விரைவு பெட்டி பொருத்திய ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. தெற்கு ரயில்வே முதன்மை செயற்பொறியாளர் இளம்பூரணம் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனை ஓட்டம், தண்டவாளங்களில் ஏற்படும் அதிர்வுகளை கணக்கிடவும், ரயில் இன்ஜின் அதிவேகத்தில் செல்லும்போது தண்டவாளத்தில் இருக்கிற குறைபாடுகளைக் கண்டறிவதற்காகவும் நடத்தப்பட்டது.

தேனி முதல் போடி வரையிலான ரயில் பாதையில் தண்டவாளத்தின் உறுதித் தன்மையை கணக்கிட அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது

இதையும் படிங்க:போடி to தேனி சோதனை ஓட்டம்: 15 கி.மீ. தூரத்தை 9 நிமிடங்கள் 20 நொடிகளில் கடந்த ரயில்

ABOUT THE AUTHOR

...view details