தமிழ்நாடு

tamil nadu

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 200 பேர்- பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

By

Published : Jul 29, 2022, 9:29 AM IST

தேனி மாவட்டத்தில் இரவு நேரத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 200 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 200 பேர்- பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 200 பேர்- பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

தேனி:ஆடி அமாவாசையை முன்னிட்டு தேனியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று(ஜூலை 28) சதுரகிரியில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்தனர். தேனி மாவட்டம் கடமலைகுண்டு உப்புத்துறை யானைகெஜம் மலைப்பாதை வழியாக இரவில் திரும்பி வந்தனர்.

அதிகாலை ஒரு மணி அளவில் நேற்று பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றை கடக்க முடியாமல் சுமார் 200 பேர் சிக்கித் தவித்தனர்.

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 200 பேர்- பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

இது குறித்து தகவல் அறிந்த கடமலைகுண்டு மற்றும் மயிலாடும்பாறை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆற்றின் மறுபக்கம் நின்றிருந்த சுமார் 200 பேரை கயிறுகளை இருபுறமும் கட்டி தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

இதையும் படிங்க:கந்துவட்டி 2.0 அதிரடி சோதனை... மருந்து கடை உரிமையாளர் உட்பட இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details