தமிழ்நாடு

tamil nadu

மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டி – பொள்ளாச்சி அணி வெற்றி

By

Published : Jan 18, 2020, 1:03 PM IST

தேனி: பெரியகுளத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்று எஸ்டி.சி. கல்லூரி கோப்பையை தட்டிச் சென்றது.

state level volley ball match in theni, sports news in tamil, tamilnadu sports, மாநில அளவிலான கைப்பந்து போட்டி, கைப்பந்துப் போட்டி  பொள்ளாச்சி அணி வெற்றி
மாநில அளவிலான கைப்பந்துப் போட்டி

வடுகபட்டி இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் சீதையம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான 31ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டிகள் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. பகலிரவு ஆட்டமாக லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாட்டின் சென்னை, திருச்சி, பொள்ளாச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10 அணிகள் பங்கேற்றன.

இறுதிநாளான நேற்று சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியும் திருச்சி தமிழ்நாடு காவல் துறை அணியும் மோதின. அதில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 25 - 21, 25 - 18 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

கலாம் திட்டத்தை நிறைவேற்ற சமூக ஆர்வலர் சைக்கிள் பயணம்

இறுதியாக நடைபெற்ற லீக் போட்டிகளில் பொள்ளச்சி எஸ்.டி.சி. கல்லூரி அணி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி, திருச்சி தமிழ்நாடு காவல் துறை அணிகள் ஆகிய மூன்று அணிகளும் லீக் சுற்றில் நான்கு போட்டிகளில் வெற்றிபெற்றதால் அவர்கள் வெற்றிபெற்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்ற அணி தீர்மானிக்கப்பட்டது.

மாநில அளவிலான கைப்பந்துப் போட்டி

அதில் பொள்ளாச்சி எஸ்.டி.சி. கல்லூரி அணி முதல் இடத்தையும், திருச்சி தமிழ்நாடு காவல் துறை அணி இரண்டாம் இடத்தையும், சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன. அதனைத் தொடர்ந்து வெற்றிபெற்ற அணிகளுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரன் தேஜஸ்வி கோப்பைகளையும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கினார்.

Intro:         பெரியகுளத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்ற பொள்ளாச்சி எஸ்டி.சி கல்லூரி அணி.!
Body: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது. வடுகபட்டி இளைஞர் விளையாட்டு கழகத்தின் சார்பில் சீதையம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான 31ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. பகல், இரவு ஆட்டமாக லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகத்தின் சென்னை, திருச்சி, பொள்ளாச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 10 அணிகள் பங்கேற்றது.
இறுதி நாளான இன்று சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைகழக அணியும், திருச்சி தமிழ்நாடு காவல்துறை அணியும் மோதின. இவற்றில் எஸ்.ஆர்.எம் பல்கலைகழக அணி 25க்கு 21, 25க்கு18 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது. இறுதியாக நடைபெற்ற லீக் போட்டிகளில் பொள்ளச்சி எஸ்.டி.சி கல்லூரி அணி, எஸ்.ஆர்.எம் பல்கலைகழக அணி, திருச்சி தமிழ்நாடு காவல்துறை அணிகள் ஆகிய மூன்று அணிகளும் லீக் சுற்றில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றதால் அவர்கள் வெற்றி பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் பொள்ளாச்சி எஸ்.டி.சி கல்லூரி அணி முதல் இடத்தையும், திருச்சி தமிழ்நாடு காவல்துறை அணி இரண்டாம் இடத்தையும், சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைகழக அணி மூன்றாம் இடத்தை பிடித்ததாக போட்டி அமைப்பாளர்களால் அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரன் தேசஸ்வி கோப்பைகளையும் ரொக்க பரிசுகளையும் வழங்கினார்.

Conclusion: மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டிகளை தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details