தமிழ்நாடு

tamil nadu

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் - போலீஸ் விசாரணை

By

Published : Mar 23, 2022, 10:39 AM IST

தேனியில் குடும்ப தகராறில் வங்கி அலுவலகத்திற்குள் இருந்த மனைவியை பின்தொடர்ந்து சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டிய கணவனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்

தேனி: மேட்டுபட்டியைச் சேர்ந்தவர் பிரேமலதா. இவரும் கணவர் வெள்ளைச்சாமி, கருத்து வேறுபாடு காரணமாக 6 மாத காலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தேவாரம் கனரா வங்கிக்கு நகை அடகு வைப்பதற்காக பிரேமலதா சென்றுள்ளார். அப்போது, அவரைப் பின்தொடர்ந்து சென்ற அவரது கணவர் வெள்ளைச்சாமி, அலுவலகத்திற்குள் இருந்த பிரேமலதாவை, அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றார்.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பிரேமலதாவை மீட்டு சிகிச்சைக்காக தேவாரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தேவாரம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்திய நிலையில் தப்பி ஓடிய வெள்ளைச்சாமியை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஓய்வுபெற்ற நீதிபதியின் பாதுகாவலர் மீது கத்தியால் தாக்குதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details