தமிழ்நாடு

tamil nadu

தேனியில் சமுதாய வளைகாப்பு - ஓபிஎஸ் பங்கேற்பு!

By

Published : Nov 27, 2019, 3:40 PM IST

தேனி: 1,360 கர்ப்பிணி பெண்களுக்கு நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கலந்துகொண்டு வளைகாப்பு பொருட்களை வழங்கினார்.

ops
ops

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. தேனி தனியார் திருமண மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு, சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வளைகாப்பு நடத்தி வைத்து வாழ்த்து கூறினார். பின்னர், கர்ப்பிணி பெண்களுக்கு உணவை பரிமாறி, அவர்களுடன் இணைந்து உணவு அருந்தினார்.

கர்ப்பிணி பெண்களுக்கு உணவு பரிமாறிய ஓபிஎஸ்

தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1,360 கர்ப்பிணி பெண்களுக்கு இந்த சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'காதுகொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்' - வளைகாப்பால் களைகட்டிய ரியோவின் இல்லம்

ABOUT THE AUTHOR

...view details