தமிழ்நாடு

tamil nadu

முதியவரின் மரணத்தில் சந்தேகம்: கல்லறையில் இருந்து உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வு

By

Published : Dec 24, 2020, 1:44 AM IST

தேனி: உத்தமபாளையம் அருகே தாத்தாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பேரன் அளித்த புகாரின் பேரில், கல்லறையில் இருந்து உடலை தோண்டி எடுத்து வட்டாட்சியர் முன்னிலையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது.

older_man_death
older_man_death

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள டி.சிந்தலைச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சலேத்து(85). இவருக்கு அந்தோணி, மரிய உவரி அந்தோணி, அந்தோணியம்மாள் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் மரிய உவரி அந்தோணி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

முதியவர் சலேத்து, தனது மற்றொரு மகன் அந்தோணி, மகள் அந்தோணியம்மாள் ஆகியோரது பராமரிப்பில் இருந்து வந்த நிலையில், நவம்பர் மாதம் 15ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், குஜராத்தில் பல் மருத்துவராக பணியாற்றி வரும் மரிய உவரி அந்தோணியின் மகன் எபினேஷ்(27), தனது தாத்தாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

older_man_death

அதன் பேரில் தேவாரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உத்தமபாளையம் வட்டாட்சியர் உதயராணி முன்னிலையில் கல்லறையில் இருந்த முதியவரின் சடலம் நேற்று (டிசம்பர் 23) தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர், முதியவரின் சடலத்தை மருத்துவக் குழுவினர் உடற்கூறாய்வு செய்தனர். இதனிடையே, உடற்கூராய்வு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக வட்டாட்சியர், காவல்துறையினர் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details