தமிழ்நாடு

tamil nadu

ரேஷன் அரிசி கடத்தலுக்கு துணைபோகிறதா புட் செல் காவல் துறை?

By

Published : Jun 8, 2023, 2:32 PM IST

தேனியில் ஒரு அரவை மில்லில் பொதுமக்களுக்காக தமிழ்நாடு அரசினால் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு மூட்டை மூட்டையாக பதுக்கப்பட்டிருந்ததை வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மூட்டை மூட்டையாகப்  பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி
மூட்டை மூட்டையாகப் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி

மூட்டை மூட்டையாகப் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி

தேனி: வெங்கலா கோயில் பகுதியில் உள்ள ஒரு அரவை மில்லில் பொதுமக்களுக்காக தமிழ்நாடு அரசினால் இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசி கடத்தப்பட்டு மூட்டை மூட்டையாக இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் தேனி மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசியில் தகவல் அளித்து உள்ளனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் உத்தமபாளையத்தில் உள்ள குடிமை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு துறை, அதாவது புட் செல் துறையினருக்கு தகவல் அளித்து விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். ஆனால், குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுத் துறையினர், இது குறித்த தகவலை சம்மந்தபட்ட அரவை மில் உரிமையாளருக்கு தகவல் கொடுத்து விட்டு பின்னர் சாவகாசமாக சம்மந்தபட்ட அரவை மில்லிற்கு சென்று ஆய்வு நடத்தி உள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் சம்மந்தபட்ட அரவை மில்லுக்கு வருவாய் துறையின் கீழ் இயங்கும் வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது அரவை மில் உரிமையாளர், அதிகாரிகளிடம் மில்லில் உள்ள வேறு பகுதிக்கு அழைத்துச் சென்று காண்பித்து உள்ளார்.

இதையும் படிங்க:GST வரி ஏய்ப்பு புகார்; மதுரையைச் சேர்ந்த 3 வணிகர்கள் கைது

இந்த நிலையில், புகார் அளித்த பொதுமக்கள், அதிகாரிகளை சரியான இடத்திற்கு அழைத்துச் சென்று வேறு இடத்தில் பதுக்கி வைக்கபட்டிருந்த ரேஷன் அரிசி குருணையினை அவர்களுக்கு காட்டி உள்ளனர். இதனை அடுத்து வட்ட வழங்கல் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது மூட்டைகளில் ரேசன் அரிசி குருணை 37 மூட்டைகள் இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர்.

பின்னர், அதனை ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்து உள்ளனர். ஆய்வில் ரேசன் அரிசி இருப்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதன் பிறகு, ரேசன் அரிசி கடத்தல் வியாபாரியை காப்பாற்ற, குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் செயல்படுவதாக மக்கள் மத்தியில் குற்றசாட்டு எழுந்து உள்ளது.

அதனைத் தொடர்ந்து வருவாய் துறையினர், ரேசன் அரிசி கடத்தல் வியாபாரியை காப்பாற்றிய குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர், ரேசன் அரிசி கடத்தல் கும்பலுக்கு துணை போகிறதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆருத்ரா மோசடி: நெமிலியில் ஊழியரை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்.. வீடு சூறையாடல்!

ABOUT THE AUTHOR

...view details