தமிழ்நாடு

tamil nadu

ஆசைவார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்ற வடமாநில இளைஞர் கைது!

By

Published : Jan 21, 2021, 10:41 AM IST

தேனி: பெரியகுளம் அருகே 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்ற வடமாநில இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

northern-youth-arrested-for-trying-to-marry-girl
northern-youth-arrested-for-trying-to-marry-girl

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 16 வயது சிறுமி, தனியார் நூற்பாலையில் கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வந்தார். அப்போது அவருடன் பணிபுரிந்து வந்த பிகார் மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்திர சவுதாரி என்ற இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு மில்லிற்கு வேலைக்கு சென்ற தனது மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பிகார் இளைஞரின் செல்போன் எண்ணை வைத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமியுடன் கோவையில் தங்கியிருந்தது தெரியவந்தது.

உடனடியாக கோவை விரைந்த காவல்துறையினர், பிகார் செல்ல தயாராக இருந்த இருவரையும் மடக்கி பிடித்தனர். அதன் பின்னர் காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பிகாருக்கு அழைத்துச் செல்ல இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: இலங்கைக்கு கடத்தவிருந்த 750 கிலோ விரலி மஞ்சள், 60 கிலோ ஏலக்காய் மூட்டைகள் பறிமுதல் - இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details