தமிழ்நாடு

tamil nadu

‘சின்னமனூர் முதல் சிகாகோ’ வரை மோடியைப் பற்றி பேசினேன்: எம்.பி. ரவீந்திரநாத் குமார்!

By

Published : Nov 30, 2019, 11:17 PM IST

தேனி: சின்னமனூர் முதல் சிகாகோ வரை பிரதமர் மோடியைப் பற்றி பேசியதை சிலர் தவறாக திரித்து பேசி வருகின்றனர் என எம்.பி. ரவுந்திரநாத் குமார் கூறியுள்ளார்.

தேனியில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார்
தேனியில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சாரல் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பேசுகையில்;

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நமது நாட்டின் இயற்கை வளங்கள் பாதுகாப்பதிலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நமது தொகுதிக்குட்பட்ட மேகமலையை சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவேன் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.

நமது நாட்டுக்காக பிரதமர் மோடி அயராது பாடுபடுகிறார், அவரைப் பற்றி சின்னமனூர் முதல் சிகாகோ வரை நான் பேசினேன், ஆனால் அதை சிலர் திரித்து அவரவர் வசதிக்கேற்ப தவறாக பேசி வருகின்றனர். இதற்கு முந்தைய மத்திய அமைச்சரவையில், இடம் பெற்றிருந்த திமுக தமிழ்நாட்டிற்கு எவ்வித நன்மையும் செய்யவில்லை.

தேனியில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார்

ஆனால், தற்போதைய அதிமுக அரசு, மத்திய அரசிடம் எடுத்துரைத்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்துள்ளது. மேலும், சபரிமலை - திண்டுக்கல் ரயில் திட்டத்தை செயல்படுத்திட தொடர்ந்து குரல் கொடுத்து வருவேன்.

மேலும், பிறக்கும் போது குழந்தை அழவில்லையென்றால், அது ஆரோக்கியமாக இல்லை ஊனமாக இருக்கிறது என அர்த்தம். அதேபோல் வாழ்க்கை முடிந்து, இறப்பதற்கு முன்பு அழ வேண்டும் அப்படி அழவில்லை என்றால் அவர்களின் மனதில் ஊனம் இருக்கிறது என அர்த்தம். ஊனம் உடலில் இருக்கலாம்! மனதில் இருக்கக்கூடாது என்று கூறினார்.

இதையும் படிங்க: தேனியில் சமுதாய வளைகாப்பு - ஓபிஎஸ் பங்கேற்பு!

Intro: சின்னமனூர் முதல் சிகாகோ வரை பிரதமர் மோடியைப் பற்றி பேசியதை சிலர் தவறாக திரித்து பேசி வருகின்றனர். தேனி எம்.பி. ரவுந்திரநாத்குமார் பேச்சு..


Body: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சாரல் விழா இன்று நடைபெற்றது. இவ்வில் கலந்து கொண்ட தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவுந்திரநாத்குமார் பேசுகையில்,
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நமது நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாப்பதிலும், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நமது தொகுதிக்குட்பட்ட மேகமலையை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவேன் என்ற தேர்தல் வாக்குறுதியில் நிறைவேற்றுவேன்.
நமது நாட்டுக்காக பிரதமர் மோடி அயராது பாடுபடுகிறார் என்று சின்னமனூர் முதல் சிகாகோ வரை பேசினேன். ஆனால் அதை சிலர் திரித்து அவரவர் வசதிக்கேற்ப தவறாக பேசி வருகின்றனர். இதற்கு முந்தைய மத்திய அமைச்சரவையில், இடம் பெற்றிருந்த திமுக தமிழகத்திற்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை. ஆனால் தற்போதைய அதிமுக அரசு, மத்திய அரசிடம் எடுத்துரைத்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்துள்ளது. மேலும் சபரிமலை - திண்டுக்கல் ரயில் திட்டத்தை செயல்படுத்திட தொடர்ந்து குரல் கொடுத்து வருவேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் பெயரில் "வெல்லம்", திண்டுக்கல் சீனிவாசன் பெயரில் "சீனி" இருப்பதால் அவர்களும் இனிமையானவர்கள். இவர்களின் வருகை இவ்விழாவிற்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளதாக பேசினார்.



Conclusion: மேலும் பிறக்கும் போது குழந்தை அழுகவில்லையென்றால் அது ஆரோக்கியமாக இல்லாமல் ஊனமாக இருக்கிறது என அர்த்தம். அதே போல் வாழ்க்கை முடிந்து இறப்பதற்கு முன்பு அழ வேண்டும் அப்படி அழுகவில்லை என்றால் அவர்களின் மனதில் ஊனம் இருக்கிறது என அர்த்தம். ஊனம் உடலில் இருக்கலாம்! மனதில் இருக்கக்கூடாது என்று பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details