தமிழ்நாடு

tamil nadu

காதல் மனைவியை கொன்றுவிட்டு போலீசுக்கு சவால்.. தேனி கில்லாடி சிக்கியது எப்படி?

By

Published : Jan 30, 2023, 12:27 PM IST

தேனி அருகே மனைவியை கொலை செய்து, அதனை மறைத்து நாடமாடிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காதலித்து கரம் பிடித்த மனைவியை கொலை செய்து நாடகாமடிய கணவன் கைது
காதலித்து கரம் பிடித்த மனைவியை கொலை செய்து நாடகாமடிய கணவன் கைது

தேனி: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலு. நூற்பாலை மில் தொழிற்சாலையில் பணிபுரிந்த இவரும், அதே தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ரம்ஜான் பேகம் என்பவரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர். காதலுக்காக வடிவேலு அப்போதே இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

திருமணத்திற்குப் பின் அவர் தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் குடியேறி, வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வடிவேல் என்ற அபூபக்கர் சித்தீக் வி.ஆர்.பி தெருவில் மளிகைக் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இதனிடைய கணவன் வடிவேல் என்ற அபூபக்கர் சித்திக் மேலும் சில பெண்களிடம் தொடர்பிலிருந்து வந்ததால், கணவன் மனைவிக்கும் இடையே கடந்த தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை ரம்ஜான் பேகம் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக அவரது உறவினர்களுக்குத் தெரிவித்து, வீட்டில் துக்க நிகழ்வு காணப் பந்தல் போடப்பட்டது.

ஆனால் ரம்ஜான் பேகத்தின் உறவினர்கள், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் ரம்ஜான் பேகத்தின் உடலை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர்.

இதனை அடுத்து கணவன் அபூபக்கர் சித்திக்கிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், தன் மனைவி மாரடைப்பாதல் உயிரிழந்தார் என்பது தான் உண்மை, நீங்கள் என் மீது வீண் பழி சுமத்துகிறீர்கள் எனவும், முடிந்தால் நான் கொலை செய்தேன் என்பதை நிரூபித்து விடுங்கள் என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த பிரேதப் பரிசோதனையில் முடிவில், திடுக்கிடும் பல உண்மைகள் வெளியானது. பிரேதப் பரிசோதனையின் படி, ரம்ஜான் பேகத்தின் மூச்சை பிடித்து நிறுத்தியும், கழுத்தை நெறித்தும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இதன் பின் காவல்துறையினர் தொடர்ந்து கணவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் மேலும் சில பெண்களிடம் தொடர்பிலிருந்ததால் மனைவி கண்டித்ததாகவும், அதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை நடந்த நிலையில் மனைவியைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பெரியகுளம் காவல்துறையினர் சந்தேக மரணத்தை, கொலை வழக்காகப் பதிவு செய்து வடிவேலு என்ற அபூபக்கர் சித்திக்கை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:இன்ஸ்டாகிராம் காதலால் 5 மாத கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்

ABOUT THE AUTHOR

...view details