தமிழ்நாடு

tamil nadu

‘திமுகவினர் தமிழை வளர்க்கிறோம் என்று பேசுவதற்கு கூட அருகதை இல்லை’ - ஹெச்.ராஜா காட்டம்!

By

Published : Aug 6, 2023, 10:07 PM IST

தேனி பெரியகுளத்தில் பாரதிய ஜனதா கட்சியினரின் இல்ல விழாவில் பங்கேற்ற ஹெச்.ராஜா, செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘திமுகவினர் தமிழை வளர்க்கிறோம் என்று பேசுவதற்கு கூட அருகதை இல்லை. அவர்கள் தமிழ் மொழியை புறக்கணிக்கின்றனர்’ என்று வன்மையாக கண்டித்தார்.

திமுக அரசு மீது எச்.ராஜா காட்டம்
திமுக அரசு மீது எச்.ராஜா காட்டம்

திமுக அரசு மீது எச்.ராஜா காட்டம்

தேனி: பெரியகுளத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராஜபாண்டி மற்றும் பெரியகுளம் கிழக்கு ஒன்றிய துணைத் தலைவர் உள்ளிட்ட கட்சியினரின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்றப் பின் செய்தியாளர்களை சந்தித்த போது, முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் ஹிந்தி தேசிய மொழி என்று நாடாளுமன்றத்திலேயே உரை நிகழ்த்தி உள்ளார். அதற்கு அப்பொழுது கூட்டணியில் இருந்த திமுக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகள் மற்றும் சில அமைச்சர்களின் வாரிசுகள் நடத்தி வரும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தியை வளர்த்துக் கொண்டு தமிழை புறக்கணிக்கிறார்கள். அவர்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழில் பேசினால் 500 ரூபாய் அபராதம் விதித்து தமிழை அளித்து வருகின்றனர்.

திமுகவினர் தமிழை வளர்க்கிறோம் என்று பேசுவதற்கு அருகதை இல்லை. மேலும் திமுகவில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மின்சாரத் துறையில் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்துள்ளதாகவும், அவர் தற்பொழுது சிறையில் உள்ளவரை தமிழக காவல்துறை தலைவர் சென்று பார்த்தால் கைதி நம்பரை சொல்லி அழைப்பாரா, அல்லது சல்யூட் அடிப்பாரா என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க:'தமிழகம் மற்றும் தெற்கு ரயில்வேயில் வளர்ச்சித் திட்டங்கள் புறக்கணிப்பு'- சு.வெங்கடேசன் ஆவேசம்!

அதைத் தொடர்ந்து, ஜெயிலுக்கு செல்ல வேண்டியவர் சிறைத்துறை அமைச்சராக இருக்கிறார். இது போன்று கொலைகாரன், கொள்ளைக்காரன், ரவுடிகள் உள்ளிட்டவர்கள் சூழப்பட்டது தான் திமுக" என காட்டமாக விமர்சித்தார். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக பேசி வருவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "அதிமுகவின் தலைமையில் இருக்கும் ஈபிஎஸ், பாரதிய ஜனதா கட்சிையை பற்றி குறை கூறினால் மட்டுமே பதில் கூறுவேன். மற்ற அமைச்சர்கள் தெரிவிப்பதற்கு நான் பதில் கூற முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி நடைப்பயணத்தை தவறுதலாக சித்தரிக்கும் யூடியூப் சேனல்கள் குறித்தும் மேலும், தற்பொழுது நடைபயணத்தின் போது பெண் கொடுத்த மனு கீழே கிடந்தது குறித்து கேட்ட போது, அப்படி செய்தி பரப்பினவரை நேராக அழைத்து வாருங்கள் செவீட்டில் அரைவேன் என அவர் கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. மேலும் அதிமுகவ மற்றும் பாஜக கூட்டணி இடையே எந்த பிரச்சினையும் இல்லாமல் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:மகாகவி பாரதியாரின் உருவப்படம் திறப்பு... குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்!

ABOUT THE AUTHOR

...view details