தமிழ்நாடு

tamil nadu

'கலைஞர் ஆட்சியில் தான் அனைத்து திட்டங்களும் கொண்டுவரப்பட்டன': தங்க தமிழ்செல்வன்

By

Published : Dec 23, 2020, 11:35 PM IST

தேனி: தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சியில் தான் அனைத்து திட்டங்களும் கொண்டுவரப்பட்டன என திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

கலைஞர் ஆட்சியில் தான் அனைத்து திட்டங்களும் கொண்டுவரப்பட்டன என பேச்சு
கலைஞர் ஆட்சியில் தான் அனைத்து திட்டங்களும் கொண்டுவரப்பட்டன என பேச்சு

தேனியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்கிற தலைப்பில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் இன்று (டிச.23) நடைபெற்றது. இதில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் அனைத்து திட்டங்களும் கருணாநிதி ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டன. அடுத்து வந்த முதலமைச்சர்கள் அந்த திட்டத்தை விரிவாக்கம் செய்தார்களே தவிர, புதிய திட்டங்கள் ஏதும் செயல்படுத்தவில்லை.

கலைஞர் ஆட்சியில் தான் அனைத்து திட்டங்களும் கொண்டுவரப்பட்டன என பேச்சு

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேரளாவில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு சொத்து வாங்கியிருப்பதாக, அங்குள்ள முன்னணி ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஏற்கனவே அவர் தேனி மாவட்டத்தில் ஆயிரம் கோடிக்கும் மேல் சொத்து வாங்கியுள்ளார்.

கலைஞர் ஆட்சியில் தான் அனைத்து திட்டங்களும் கொண்டுவரப்பட்டன என பேச்சு

சமீபத்தில் ரூ.86 லட்சம் செலவில் செய்தித்தாளில் தன்னைப் பற்றி சுய விளம்பரம் செய்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம், அந்த தொகையை தொகுதி மக்களின் நலனுக்கு செலவு செய்திருக்கலாம். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறினார். ஊழல் அரசு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்டப்பேரவையில் வாக்களித்தார்.

பின்னர் பதவி, பண ஆசையில் மோடி, அமித்ஷாவின் சொல் கேட்டு மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் தன்னை இணைத்துக் கொண்டார்" என்றார்.

இதையும் படிங்க: குப்பை கொட்ட காசு கட்ட வேண்டுமா - ஸ்டாலின் கடும் விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details