தமிழ்நாடு

tamil nadu

Theni - நெல் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் - விவசாயிகள் வேதனை!

By

Published : Jul 26, 2023, 6:05 PM IST

தேனியில் நேரடி நெல் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், நெல்லை விளைவித்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

Theni - நெல் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் - விவசாயிகள் வேதனை!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டு கடந்த 20 நாள்களாக அறுவடைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேல்மங்கலம் பகுதியில் நெல் அறுவடை செய்யப்படும் நாள்களில் அப்பகுதிகளில் ஆண்டுதோறும் இரண்டு இடங்களில், தமிழ்நாடு அரசு சார்பாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு திமுக பிரமுகர் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைக்கு 10 ரூபாய் கமிஷன் வழங்க வேண்டும் என விவசாயிகளிடம் கேட்டதாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இது குறித்து புகார் தெரிவித்து நேரடியாக விவசாயிகள் மனு கொடுத்தனர்.

இந்நிலையில் நேற்று (ஜூலை 25) பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணகுமார் மற்றும் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் ஆகியோர், 'விவசாயிகள் யாருக்கும் கமிஷன் கொடுக்க வேண்டாம்' எனக் கூறி நேற்று மேல்மங்கலத்தில் இரண்டு நெல் கொள்முதல் நிலையங்களைத் தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு நெல் கொள்முதல் பணிகள் தொடங்கப்பட்டன.

இதனை அடுத்து இன்று (ஜூலை 26) காலை முதல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை தரம் பார்த்து மூடை பிடிக்கும் பணியாளர்கள், தங்களுக்கு அரசால் வழங்கப்படும் ஊதியம் குறைவாக உள்ளது எனக் கூறி நெல் கொள்முதல் செய்யும் பணிகளை புறக்கணித்துள்ளனர்.

நெல் கொள்முதல் செய்யாமல் பணி புறக்கணிப்பு ஈடுபட்டதைத் தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர். அப்போது, ஜெயமங்கலம காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி மாற்று ஏற்பாடு செய்ய விவசாயிகளை கேட்டுக் கொண்டனர்.

அதன் அடிப்படையில் விவசாயிகள் ஒன்றிணைந்து அறுவடை செய்த நெல் மழையில் சேதம் அடையாமல் இருக்க விவசாயிகள் ஒன்று இணைந்து மாற்று பணியாளர்களை கொண்டு நெல் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து கடந்த நான்கு நாள்களாக அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் நிலையத்தில் கமிஷன் தொகை கேட்டு நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், தற்பொழுது பணியாளர்கள் ஊதியம் குறைவு என்று பணியை புறக்கணித்துள்ளனர் எனவும் விவசாயிகள் வேதனைத் தெரிவித்தனர். இந்தப் பிரச்னைகளால் நெல் அறுவடை செய்த விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

இதையும் படிங்க:சீர்காழி நகராட்சி மீது சிறு வியாபாரிகள் புகார்: இலவச தள்ளு வண்டிகள் பெற கையூட்டு கேட்பதாக குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details