தமிழ்நாடு

tamil nadu

கஞ்சா செடிகளை கண்டறிய ட்ரோன் கேமரா

By

Published : Dec 8, 2020, 3:24 PM IST

தேனி: கஞ்சா செடிகள் வளர்ப்பதை கண்டறிய மாவட்ட காவல் துறையினர் ட்ரோன் கேமரா மூலம் சோதனை செய்துவருகின்றனர்.

கஞ்சா செடிகளை கண்டறிய ட்ரோன் கேமரா
கஞ்சா செடிகளை கண்டறிய ட்ரோன் கேமரா

தமிழ்நாடு-கேரள எல்லையில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு சட்ட விரோதமாக கஞ்சா செடிகள் வளர்க்கப்படுகின்றன. இதனை கண்டுபிடித்து அழிக்க மாவட்ட காவல் துறையினர் சார்பில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

கடந்த மாதம் இந்த தனிப்படையினர் வெற்றி எனும் மோப்ப நாய் உதவியுடன் கம்பம் மெட்டு அடிவாரத்தில் சுமார் 500 கிலோ கஞ்சா செடிகளை கண்டறிந்து தீயிட்டு அழித்தனர்.

கஞ்சா செடிகளை கண்டறிய ட்ரோன் கேமரா

தற்போது அப்பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் சோதனை செய்துவருகின்றனர். மேலும் வரசநாடு வனப்பகுதி, குரங்கணி உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் சோதனை செய்யப்பட உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா செடிகளை கண்டறிய ட்ரோன் கேமரா

இதையும் படிங்க: கஞ்சா விற்பனையை தடுக்க முயன்ற பெண் மீது தாக்குதல்...!

ABOUT THE AUTHOR

...view details