தமிழ்நாடு

tamil nadu

அரசு உதவி பெறும் பள்ளிக்கு 7 கணினி.. முன்னாள் மாணவர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

By

Published : Nov 21, 2022, 8:09 PM IST

Updated : Nov 21, 2022, 10:45 PM IST

தேனி மாவட்டம், வடுகபட்டியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வி மேம்பட முன்னாள் மாணவர்கள் ஏழு கணினி வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ளது வடுகபட்டி. இந்த கிராமத்தில் ஸ்ரீ மார்க்கண்டேயா நெசவாளர் நடுநிலைப்பள்ளி என்னும் அரசு உதவிபெறும் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 800 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். சுமார் 30 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் தனியார் பள்ளிக்கு இணையாக ஸ்மார்ட் வகுப்பறை, புரொஜெக்டர் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கப்படுகிறது.

வடுகபட்டி பள்ளிக்கு அதே ஊரில் உள்ள ஹனி கிங்ஸ்(Honey Kings) அறக்கட்டளை, ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் இணைந்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இப்பள்ளிக்காக செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக அண்மையில் 7 கணினிகள் இப்பள்ளிக்கு இலவசமாக வழங்கப்பட்டது. Broadridge என்ற தனியார் மென்பொருள் நிறுவனம் Next-Gen Village Schools என்ற திட்டத்தின் மூலமும் மற்றும் 'ஹனி கிங்ஸ்' அறக்கட்டளை சார்பிலும் இந்த கணினிகள் வழங்கப்பட்டன.

ஏழை மாணவர்களுக்காக ஏழு கணினி..முன்னாள் மாணவர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

இந்த நிகழ்ச்சியில், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை P.சுசிலா, தற்போதைய தலைமை ஆசிரியர் ராஜாராம் மற்றும் ஸ்ரீமார்க்கண்டேயா நெசவாளர் நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள், ஹனி கிங்ஸ் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் சத்தியசுந்தரம், ராஜாராம், ரமேஷ், J.திருப்பதி, P.திருப்பதிராஜன், குருசாமி, பாண்டியன், ஜெயபாலாஜி,சௌந்தரபாண்டியன், மணிகண்டன், மாரியப்பன் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர். ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக முன்னாள் மாணவர்கள் செய்த இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: குரூப்-2 தேர்வில் சாதித்த 55 வயது மாற்றுத்திறனாளியின் வைராக்கிய கதை

Last Updated : Nov 21, 2022, 10:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details