தமிழ்நாடு

tamil nadu

சிறுமிக்கு கட்டாய திருமணம்: போக்சோவில் ஒருவர் கைது!

By

Published : Oct 31, 2020, 1:38 AM IST

தேனி: போடியில் 15 வயது சிறுமியை கட்டாயத் திருமணம் செய்த 43 வயதுடைய நபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

15 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: போக்சோவில் ஒருவர் கைது!
A man arrested in pocso

தேனி மாவட்டம் போடிபுதூர் வலசத்துறையிலுள்ள வடிவேல் நகர் பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணன்(43). தள்ளுவண்டியில் வாழைப்பழ வியாபாரம் செய்துவரும் இவர் முதல் மனைவி இறந்ததும், இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது வீட்டருகே வசித்துவரும் 15 வயது சிறுமியிடம் பழகி வந்த கிருஷ்ணன், அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடந்த செவ்வாய்க்கிழமையன்று பழனிக்கு அழைத்துச் சென்று கட்டாயத் திருமணம் செய்துகொண்டார்.

சிறுமியை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தேடுதல் வேட்டை நடத்தி வந்த போடி காவல் துறையினர், நேற்று (அக்.30) லட்சுமிபுரத்திலுள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அருகே இருவரையும் பிடித்தனர்.

இதனையடுத்து 15 வயது சிறுமியை கட்டாயத் திருமணம் செய்த குற்றத்திற்காக கிருஷணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போடி காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details