தமிழ்நாடு

tamil nadu

தேனியில் பெட்ரோல் பங்கில் பணம் கேட்டு மிரட்டிய சிவசேன கட்சியினர் கைது!

By

Published : Dec 17, 2022, 3:38 PM IST

தேனியில் பெட்ரோல் பங்கில் பணம் கேட்டு மிரட்டியதாக சிவசேனா கட்சியின் மாநில பொதுசெயலாளர் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்

பெட்ரோல் பங்க்கில் பணம் கேட்டு மிரட்டிய சிவசேனா கட்சியினர் 3 பேர் கைது
பெட்ரோல் பங்க்கில் பணம் கேட்டு மிரட்டிய சிவசேனா கட்சியினர் 3 பேர் கைது

பெட்ரோல் பங்க்கில் பணம் கேட்டு மிரட்டிய சிவசேனா கட்சியினர் 3 பேர் கைது

தேனி: கம்பம் சாலையில் வி.வி எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இங்கு ஹாரிங்டன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த பெட்ரோல் பங்கிற்கு வந்த தமிழ்நாடு சிவசேனா கட்சியின் மாநில பொது செயலாளர் குரு அய்யப்பன் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த நாட்ராயன், ஸ்டாலின் ஆகியோர் தாங்கள் சபரிமலை அய்யப்ப சேவா சங்கத்தின் சார்பாக அன்னதானம் மற்றும் நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும், அதற்கு நன்கொடை வழங்க வேண்டும் என கேட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கு பங்கின் மேலாளர் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த நாட்ராயன் மற்றும் குரு அய்யப்பன் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் சண்டையாக மாறி இருதரப்பினரும் தாக்கி கொண்டனர். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பணம் கேட்டு மிரட்டி தாக்குதல் நடத்தியதாக சிவசேனா கட்சியின் மாநில பொது செயலாளர் குரு அய்யப்பன் மற்றும் நாட்ராயன், ஸ்டாலின் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் குரு அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சிறுத்தை தோலை மொட்டை மாடியில் காய வைத்தவர் கைது

ABOUT THE AUTHOR

...view details