தமிழ்நாடு

tamil nadu

தோடர் சால்வை விவகாரம்; தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை?

By

Published : Oct 24, 2021, 7:25 AM IST

புவிசார் குறியீடுடைய எம்பிராய்டரிங் பூ வேலைப்பாடுடைய தோடர் சால்வைகளை தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோடர் பழங்குடியின மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சால்வைகளில் பூ எம்பிராய்டரி மேற்கொள்ளும் தோடர் பழங்குடியினர் தொடர்பான காணொலி
சால்வைகளில் பூ எம்பிராய்டரி மேற்கொள்ளும் தோடர் பழங்குடியினர் தொடர்பான காணொலி

நீலகிரி: நீலகிரியில் தோடர், கோத்தர், இருளர், காட்டுநாயக்கன், குரும்பர், பணியர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் தோடர்கள் பயன்படுத்தும் சால்வைகள், பனியன்கள் உள்ளிட்டவற்றில் பதியப்படும் எம்பிராய்டரிங் பூ வேலைப்பாடு உலக பிரசித்தி பெற்றது.

இதன் காரணமாக அரசால் தோடர் சால்வைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தோடர் அல்லாத தனியார் அமைப்பினர் சிலர், பாரம்பரிய பூ வேலைப்பாடுடைய சால்வைகள் தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சால்வைகளில் பூ எம்பிராய்டரி மேற்கொள்ளும் தோடர் பழங்குடியினர் தொடர்பான காணொலி

இதனால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவது குறித்து புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக தோடர் பழங்குடியின அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஜப்பான் இளவரசியாக கடைசி பிறந்தநாளை கொண்டாடிய மாகோ!

ABOUT THE AUTHOR

...view details