தமிழ்நாடு

tamil nadu

யூகலிப்டஸ் மரங்களால் காணாமல் போகும் சதுப்பு நிலங்கள்!

By

Published : Aug 25, 2020, 9:11 PM IST

Updated : Aug 25, 2020, 9:20 PM IST

நீலகிரி: யூகலிப்டஸ் மரங்களால் நீலகிரியின் சதுப்பு நிலங்கள் காணாமல் போய்விட்டதாக சமூக ஆர்வலர் வேதனை தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர் வேதனை
சமூக ஆர்வலர் வேதனை

ஈடிவி பாரத் ஊடகத்திடம் சமூக ஆர்வலர் மனோகரன் பேசியதாவது, "ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1848இல் ஆஸ்திரேலியாவிலிருந்து யூகலிப்டஸ் நாற்றுகள் கொண்டு வரப்பட்டு, நீலகிரி வனப்பகுதிகளில் வளர்க்கப்பட்டன. தற்போது மாவட்டத்தில் 30 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் யூகலிப்டஸ் மரங்கள் வளர்த்துள்ளன.

ஆண்டுதோறும் பருவமழை காலங்களில், இந்த மரங்களால் வீடுகள் இடிகின்றன. மனிதர்கள் உயிரிழக்கின்றனர். ஆண்டிற்கு ஐந்தாயிரம் லிட்டர், நிலத்தடி நீரை யூகலிப்டஸ் மரங்கள் உறிஞ்சுவதால், நீர்வளம் பாதிப்பட்டுள்ளதாக மத்திய நீர்வள ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி இந்த மரங்களால் நீலகிரியின் சதுப்பு நிலங்கள் காணாமல் போய்விட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது, ஊட்டி ஆர்சி காலனி, சோலூர் பகுதிகளில் யூகலிப்டஸ் மரங்கள் விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். இந்த மரங்களை வெட்டி அகற்ற ஏற்கனவே அரசு ஆணையிட்டும், நீலகிரியில் வெட்டப்படாமல் உள்ளன. இங்குள்ள 150 தேயிலை தொழிற்சாலைக்கு கருவேல மரங்கள் வெட்டப்படுகின்றன. இதேபோல் யூகலிப்டஸ் மரங்களையும் வெட்டி விறகுக்காக பயன்படுத்த வேண்டும்" என்றார்.

சமூக ஆர்வலர் வேதனை

இதையும் படிங்க: கனமழையால் சாயும் நிலையில் மரம்; பொதுமக்கள் அச்சம்!

Last Updated : Aug 25, 2020, 9:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details