தமிழ்நாடு

tamil nadu

நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டும் சுற்றுலாப் பயணிகள்

By

Published : May 15, 2022, 10:10 PM IST

கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் நீலகிரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள், மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டு வருகின்றனர்.

நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டும் சுற்றுலாப் பயணிகள்
நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரிமாவட்டத்தில் இயக்கப்படும் மலை ரயில் ஆங்கிலேயரால் 1899ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்பட்டது. ஆசியாவிலேயே 22 கிலோ மீட்டர் மலைப்பாதையில் பல சக்கரங்களைக்கொண்டு இயக்கப்படும் ஒரே மலை ரயில் என்ற பெருமை உடையது.

இந்த மலை ரயிலில் மலைப்பாதையில் பயணிப்பது என்பது ஒரு சுகமான அனுபவமாகும். இந்த மலைரயிலில் பயணிக்க உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தற்போது ஏராளமானோரும் வந்து செல்கின்றனர்.

சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்று யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இந்த மலை ரயிலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டும் சுற்றுலாப் பயணிகள்

குறிப்பாக வெளியூர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இதையும் படிங்க:வைரலாகும் பழைய நீராவி எஞ்சின் ரயிலின் புகைப்படம்.. இது நம்ம ஊரு தான்!

ABOUT THE AUTHOR

...view details