தமிழ்நாடு

tamil nadu

வாகனம் அனுமதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எஸ்.டி. சோம் சேகர்

By

Published : Apr 4, 2021, 3:13 PM IST

கர்நாடகாவிலிருந்து, நீலகிரிக்கு இரவில் வரும் வாகனங்களை அனுமதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் எஸ்.டி. சோம் சேகர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எஸ்.டி. சோம் சேகர்
அமைச்சர் எஸ்.டி. சோம் சேகர்

உதகை தொகுதி பாஜக வேட்பாளர் போஜராஜை ஆதரித்து கர்நாடகா மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் எஸ்.டி. சோம் சேகர் கடந்த ஒரு வாரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், “பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்குள் இந்த தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளதால், தற்போது இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை சாலை மூடப்படுகிறது.

இரவில் இந்த சாலை மூடப்படுவதால் கர்நாடகாவிலிருந்து, நீலகிரிக்கு வரும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் அவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.டி. சோம்சேகர் தெரிவித்தார். இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால் தமிழ்நாடு-கர்நாடக அமைச்சர்கள், அலுவலர்கள் கலந்து பேசி இரவு நேரத்திலும் சாலையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:உதகையில் குருத்தோலை ஞாயிறு பவனி

ABOUT THE AUTHOR

...view details