தமிழ்நாடு

tamil nadu

குன்னூர் அருகே காட்டெருமையைச் சுட்டுக் கொன்றதாக மூவர் கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 5:01 PM IST

Nilgiris bison shooting case: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டெருமையைச் சுட்டுக் கொன்ற மூன்று நபர்களைச் சிறப்புப் படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

three-arrested-in-bison-shooting-case-in-coonoor
குன்னூர் அருகே காட்டெருமையை சுட்டுக் கொன்றதாக மூவர் கைது

நீலகிரி:குன்னூர் அருகே அக்டோபர் 19ஆம் தேதி அன்று குந்தா வனச்சரகம், காட்டேரி அணை செல்லும் வழியில் காட்டெருமை ஒன்று இறந்து இருந்ததையடுத்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டெருமை உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து பார்த்த போது காட்டெருமை துப்பாக்கியால் சுடப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, காட்டெருமை இறந்தது தொடர்பாக உடனடியாக மாவட்ட வன அலுவலர் மற்றும் பணியாளர்கள் விசாரணையைத் தொடங்கினர். தீவிர விசாரணை மேற்கொண்டதில் சிவப்பு வேகனார் வாகனம் மற்றும் கருப்பு பொலிரோ வாகனங்கள் சந்தேகத்திற்குரிய வகையில் சம்பவ இடத்தில் சுற்றி வந்தது தெரியவந்தது.

பின்பு அந்த இடத்திலிருந்து செல்லும் அனைத்து சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்ததில் சிவப்பு வேகானர் வாகனம் மற்றும் கருப்பு கலர் பொலிரோ கூடலூர் வரை சென்றது தெரியவந்தது. 2023 செப்.23ஆம் தேதி கூடலூர் பகுதியில் தனிப்படை விசாரணையின் போது கருப்பு பொலிரோ வாகனம் நிற்காமல் சென்றதைத் தொடர்ந்து, வண்டி விரட்டப்பட்டதில் நந்தட்டி, கூடலூர் என்ற இடத்தில் அந்த வண்டியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டார்.

பின்னர் அந்த வண்டியை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்பு அந்த வண்டியிலிருந்த ஓட்டுநர் உரிமத்தை வைத்து யார் வாகனத்தை இயக்கியது என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த சம்பவத்தில் வேறு சில நபர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்பு, காவல் துறை சார்ப்பில் சிறப்புக் குழு அமைத்து, அவர்களைப் பிடிக்கத் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குற்றவாளிகள் கேரளா, கர்நாடகா மற்றும் கூடலூர் பகுதியில் ஆங்காங்கே பதுங்கி இருப்பது அறியப்பட்டது. சிறப்புக் குழுவின் தொடர் நடவடிக்கையின் காரணமாகச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று நபர்களான ஷிபு, தர்மகிரி சதீஷ், சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களைக் குற்றச் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்துச் சென்று குற்றம் நடந்த நிகழ்வைக் கேட்டறிந்துள்ளனர். அப்போது குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தப்பி ஓட முயன்ற போது அவர்கள் விரட்டி பிடிக்கப்பட்டனர்.

இவர்கள் மூவரும் 2023 அக்கேடாபர் 19ஆம் தேதி நடந்த காட்டு மாடு வேட்டை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்குற்ற வழக்கில் தொடர்புடைய சிவப்பு வேகானர் வாகனம் மற்றும் நீல ஆல்டோ வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. எஞ்சி உள்ள குற்றவாளிகளைப் பிடிக்கச் சிறப்புக் குழு மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மூன்று நாட்களாக முடங்கி கிடக்கும் தென்சென்னை.. இயல்பு நிலைக்கு திரும்புவது எப்போது?

ABOUT THE AUTHOR

...view details