தமிழ்நாடு

tamil nadu

பெண்ணிடம் நகை பறிப்பு!

By

Published : Mar 30, 2021, 12:37 PM IST

பந்தலூர் அருகே பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற அடையாளம் தெரியாத நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பெண்ணிடம் நகை பறிப்பு
பெண்ணிடம் நகை பறிப்பு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே வெள்ளரி பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் கீர்த்தி. இவர் நேற்று (மார்ச் 29) வழக்கம் போல் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் கடையில் சில பொருள்களை வாங்கியுள்ளார். பின் அந்த இளைஞர் கீர்த்தி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.

பெண்ணிடம் நகை பறிப்பு

தற்போது இந்தக் காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ரூ.40 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details