தமிழ்நாடு

tamil nadu

குன்னூர் மலை ரயிலில் கூட்டம் அதிகரிப்பு: ஏமாற்றமடைந்த சுற்றுலாப் பயணிகள்!

By

Published : Dec 29, 2019, 11:44 PM IST

நீலகிரி: குன்னூர் சிறப்பு மலை ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் பலரும் மலை ரயிலில் பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

tourist hill train
குன்னூர் மலை ரயில்

தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்காக பள்ளி, கல்லூரிகளில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இங்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் மலை ரயிலில் பயணம் செய்வதற்கு அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றனர். குன்னூரிலிருந்து ரண்ணிமேடு பகுதிக்கு கடந்த 24ஆம் தேதிமுதல் சொகுசுப் பெட்டிகளுடன் சிறப்பு மலை ரயில் நாள்தோறும் இயக்கப்பட்டுவருகிறது.

குன்னூர் மலை ரயில்

இதில், பயணிக்க சிறப்புக் கட்டணமாக ஒரு நபருக்கு 470 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்தச் சிறப்பு மலை ரயில் ஜனவரி 19ஆம் தேதிவரை இயக்கப்படுவதால் தற்போது அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் இந்த மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுவதால் மலை ரயிலில் பயணம் செய்வதற்கு பலருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர்.

இதையும் படிங்க: சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை வழிமறித்த சிறுத்தை - வீடியோ

Intro:குன்னூர் சிறப்பு மலை ரயிலில் கூட்டம் அதிகரித்ததால் பல சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றம்.
நாடு முழுவதும் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு ஏறாளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் மலை ரயிலில் பயணம் செய்ய அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் குன்னூரில் இருந்து ரண்ணி மேடு பகுதிக்கு கடந்த 24 ஆம் தேதி முதல் சொகுசு பெட்டிகளுடன் சிறப்பு மலை ரயில் நாள் தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிக்க சிறப்பு கட்டணமாக ஒருவர்க்கு 470 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த சிறப்பு மலை ரயில் ஜனவரி 19 ஆம் தேதி வரை இயக்கபடுவதால் தற்போது அதிகமான சுற்றுலா பயணிகள் இந்த மலை ரயிலில் ஆர்வம் காட்டி வந்த நிலையில் பலருக்கு இடம் கிடைக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்‌.

Body:குன்னூர் சிறப்பு மலை ரயிலில் கூட்டம் அதிகரித்ததால் பல சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றம்.
நாடு முழுவதும் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு ஏறாளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் மலை ரயிலில் பயணம் செய்ய அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் குன்னூரில் இருந்து ரண்ணி மேடு பகுதிக்கு கடந்த 24 ஆம் தேதி முதல் சொகுசு பெட்டிகளுடன் சிறப்பு மலை ரயில் நாள் தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிக்க சிறப்பு கட்டணமாக ஒருவர்க்கு 470 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த சிறப்பு மலை ரயில் ஜனவரி 19 ஆம் தேதி வரை இயக்கபடுவதால் தற்போது அதிகமான சுற்றுலா பயணிகள் இந்த மலை ரயிலில் ஆர்வம் காட்டி வந்த நிலையில் பலருக்கு இடம் கிடைக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்‌.

Conclusion:

ABOUT THE AUTHOR

...view details