தமிழ்நாடு

tamil nadu

கூட்டுறவுக் கடன் தள்ளுபடி ஏமாற்று வேலை - எம்.பி. கார்த்தி சிதம்பரம்

By

Published : Feb 27, 2021, 4:01 PM IST

நீலகிரி: முதலமைச்சர் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்கிறாரா அல்லது கடனை செலுத்துகிறாரா என்பதை தெளிவுப்படுத்தவேண்டும் என மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.

karthi
karthi

சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நீலகிரிக்கு வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணி எப்படி வெற்றி பெற்றதோ, அதே போல் வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் போதும் தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

அதிமுக எந்த சூழ்ச்சி செய்தாலும் அது மக்கள் மத்தியில் செல்லுப்படியாகாது. பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்த போது கீழ்தட்டு மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. கீழ்த்தட்டு மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். தமிழ்நாட்டை பொறுத்தவரை எப்போதுமே தேர்தல் அமைதியான முறையிலேயே நடந்திருக்கிறது. அதே போல் வரும் சட்டப்பேரவை தேர்தலும் அமைதியாகவே நடக்கும். நான் இதுவரை 11 தேர்தல்களை சந்தித்துள்ளேன். மின்னணு வாக்கு இயந்திரங்களில் ஏதும் செய்ய முடியாது.

கார்த்தி சிதம்பரம் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

புதுச்சேரியை பொருத்தவரை பாஜக, சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்த்தது. இது பாஜகவுக்கு புதிதல்ல. ஏற்கனவே கோவா, மத்தியப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் இதுபோன்ற ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரிக்கு மோடிவரும் போது காங்கிரஸ் ஆட்சி இருக்க கூடாது என்பதால் அங்கு ஆட்சியை கவிழ்த்தனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது புதுச்சேரியில் பொதுமக்கள் கண்டிப்பாக பாஜகவை நிராகரிப்பார்கள்.

கூட்டுறவுக் கடன் தள்ளுபடி பொறுத்தவரை ஏமாற்றுவேலை. கூட்டுறவு வங்கிகள் தற்போது ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்கிறாரா அல்லது கடனை செலுத்துகிறார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். அவருக்கு தள்ளுபடி செய்யும் அதிகாரம் இல்லை. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் மூன்று தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் மீண்டும் எழுச்சியுடன் செயல்படும்:கார்த்தி சிதம்பரம்!

ABOUT THE AUTHOR

...view details