தமிழ்நாடு

tamil nadu

மீண்டும் தொடங்கியது மலை ரயில் போக்குவரத்து!

By

Published : Jan 11, 2021, 10:58 AM IST

நீலகிரி: தொடர்ந்து பெய்துவந்த கனமழை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மலைரயில் போக்குவரத்தானது மீண்டும் தொடங்கியது.

மலை ரயில் போக்குவரத்து தொடக்கம்
மலை ரயில் போக்குவரத்து தொடக்கம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட மலை ரயிலானது கடந்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கடந்த 31ஆம் தேதி மேட்டுப்பாளையம் முதல் உதகைவரை இயக்கப்பட்டது.

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை 46.5 கிலோமீட்டர் கொண்ட இந்த மலை ரயில், பாதையில் இருபுறமும் அழகிய இயற்கைக் காட்சிகளைச் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துவருகின்றனர்.

மலை ரயில் போக்குவரத்து தொடக்கம்

கடந்த ஒரு வாரங்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மண்சரிவு, மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால், இதனை ரயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தி உள்ளனர். எனவே மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான ரயில் போக்குவரத்தானது இன்று (ஜன.11) முதல் மீண்டும் தொடங்கியுள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:போர் வாகனங்கள் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த பொருள்கள் ஒப்படைப்பு!

ABOUT THE AUTHOR

...view details