தமிழ்நாடு

tamil nadu

குடியரசு தினத்தையொட்டி ராணுவ வீரர்களுக்கான மினி மாரத்தான் போட்டி!

By

Published : Jan 25, 2020, 1:46 PM IST

நீலகிரி: குன்னூரில் குடியரசு தினவிழாவையொட்டி  ராணுவ வீரர்கள், சிறுவர்களுக்கான மினி மாரத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Mini Marathon Competition
Mini Marathon Competition

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் 71ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு 3 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் தூரத்திற்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இளைஞர்கள் ராணுவத்தில் சேருவதை ஊக்குவிக்கும் வகையிலும், உடல் ஆரோக்கிய பயிற்சி, ஆரோக்கியமாக வாழ்வதற்காக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் ராணுவ வீரர்கள், அலுவலர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மராத்தான் போட்டியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியை வெலிங்டன் ராணுவ மைய கமாண்டர் பிரிகேடியர் எஸ்.கே. குரையா தொடக்கி வைத்தார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கான மினி மாரத்தான் போட்டி

நான்கு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில், முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு, குன்னூர் ராணுவ மையக் கமாண்டரின் மனைவி ஹர்தீப் கோர் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.

இதையும் படிங்க: ஸ்கிப்பிங்கில் உலக சாதனை படைத்து பள்ளி மாணவி அசத்தல்!

Intro:
குன்னூரில் குடியரசு தினவிழாவையொட்டி ராணுவ வீரர்கள் மற்றும் சிறுவர் சிறுமியருக்கான மினி மாரத்தான் போட்டியில் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் 71வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு 3 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது .
இளைஞர்கள் ராணுவத்தில் சேருவதற்கு ஊக்குவிக்கும் வகையிலும், உடல் ஆரோக்கிய பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ராணுவ வீரர்கள் அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் உட்பட மாணவ மாணவியரும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கொட்டும் பனியில் அதிகாலையிலேயே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மராத்தான் போட்டியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியை வெலிங்டன் ராணுவ மைய கமாண்டர் பிரிகேடியர் எஸ் .கே .குரையா துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு, ராணுவ மைய கமாண்டரின் மனைவி ஹர்தீப் கோர் குறையா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 17 பேருக்கு பதக்கங்கள் வழங்கினார்.

Body:

Conclusion:

ABOUT THE AUTHOR

...view details