தமிழ்நாடு

tamil nadu

கோடநாடு வழக்கு: கனகராஜ் சகோதரர் தனபாலிடம் விசாரணை

By

Published : Aug 25, 2021, 7:40 AM IST

கோடநாடு வழக்கு தொடர்பாக வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட கனகராஜின் சகோதரர் தனபாலிடம் நேற்று 1 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

kodanad-robbery-case-1-hour-interrogation-with-a1-brother-dhanabal
கோடநாடு கொள்ளை வழக்கு- கனகராஜ் சகோதர் தனபாலிடம் விசாரணை

நீலகிரி:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தற்போது அரசியல் களத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை, கோடநாடு விவகாரம் தொடர்பாக விவாதிக்க சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர கோரிக்கைவிடுத்தார்.

இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் கடுமையான எதிர்வினையாற்றினர். ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் இது தொடர்பாகப் பேச ஆளுநரைச் சந்தித்தனர். அரசியல் களத்தில் தற்போது இவ்விவகாரம் பூதாகரமாக வெடிக்க காரணம், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் மீண்டும் மறு விசாரணை நடத்தப்படுவதுதான்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு உதகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் ஆஜரான சயான், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரும், எடப்பாடி பழனிசாமியின் உறவினருமான கனகராஜ் தன்னிடம் கூறியபடி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூடலூர் பகுதியைச் சேர்ந்த மர வியாபாரியும் அதிமுகவில் மாநில வர்த்தகர் அணி அமைப்பாளருமான சஜீவன் தூண்டுதலின்பேரில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றதாக வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தகவல் வெளியானது.

அதிமுக ஆட்சியில் இருந்ததால் உயிருக்குப் பயந்து அப்போதைய விசாரணையின்போது தன்னால் இதனைக் கூற முடியவில்லை என்றும் அவர் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 24) உதகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் முன்னிலையில் வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு பின்னர் சாலை விபத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் முன்னிலையானார்.

அவரிடம், சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது, பல புதிய சம்பவங்களை அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:விரைவில் சுற்றுலா தலங்கள் திறக்க நடவடிக்கை - வனத் துறை அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details