தமிழ்நாடு

tamil nadu

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: பிணையில் வெளிவந்த சயான் ஆஜர்

By

Published : Jul 30, 2021, 7:06 PM IST

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த சயான் இன்று மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் ஆஜரானார்.

Kodanad case Sayan appears court
சயான் ஆஜர்

நீலகிரி: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில், அவர் மறைவிற்குப் பிறகு 2017ஆம் ஆண்டு உள்ளே நுழைந்த ஒரு கும்பல் அங்கிருந்த காவலாளியைக் கொலை செய்துவிட்டு, கொள்ளையில் ஈடுபட்டது.

அந்த சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது. இதன் விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிறது.

சிறைவாசம்

சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் இந்நாள்வரை நீதிமன்ற காவல் காரணமாக சிறையில் இருந்துவந்தனர். சயான் பிணை வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததில், கடந்த 7ஆம் தேதி நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி பிணை வழங்க உத்தரவிடக்கோரி வாளையாறு மனோஜ் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை மாவட்ட நீதிபதி சஞ்சீவ் பாபா ஏற்றுக்கொண்டார்.

அதனடிப்படையில் பிணையில் வெளிவந்த சயான் இன்றைய வழக்கு விசாரணைக்கு ஆஜரானார். அவருடன் வாளையாறு மனோஜ், ஜித்தின்ஜாய் ஆகியோரும் ஆஜராகினர்.

வழக்கு விசாரணை 13ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்த சயான் தரப்பு வழக்கறிஞர்கள் கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக கேட்கப்பட்டது.

சயான் தரப்பு வழக்கறிஞர்கள்

உயர் நீதிமன்றத்தில் மனு

அப்போது அவர்கள்,”முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, அப்போதைய மாவட்ட ஆட்சியர் சங்கர், காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோரிடம் விசாரிக்க உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட மனு தள்ளுபடி செய்யபட்டதால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது” எனதெரிவித்தனர்.

இதையும் படிங்க: கொடநாடு கொலை, கொள்ளை குற்றவாளிக்குப் பிணை வழங்கி உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details