தமிழ்நாடு

tamil nadu

குன்னூரில் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் விசர்ஜனம்!

By

Published : Aug 25, 2020, 6:20 PM IST

நீலகிரி: குன்னூர் பகுதிகளில் வீடுகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

விநாயகர் சிலைகள்
விநாயகர் சிலைகள்

கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கில் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்ட நிலையில் விநாயகர் விசர்ஜன விழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்து முன்னணி சார்பில் கோயில்களில் விநாயகர் சிலை வைத்து தனித்தனியாக விசர்ஜனம் செய்யப்பட்டது.

குன்னூர் அருவங்காடு, வெலிங்டன், கொலக்கம்பை உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் விநாயகர் சதுர்த்தியன்று வைக்கப்பட்டன.

இதில் ஒன்றுமுதல் ஐந்து அடி உயரம் கொண்ட விநாயகர் சிலைகள், கிருஷ்ண அவதார விநாயகர், புலி வாகன விநாயகர், தாமரை விநாயகர் உள்ளிட்ட சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கடந்த மூன்று தினங்களுக்கு பிறகு இன்று 30-க்கும் மேற்பட்ட சிலைகளை கன்டோன்மென்ட் ஆற்றங்கரையோரம் விசர்ஜனம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வெலிங்டன் மார்க்கெட், அண்ணா நகர், அம்பேத்கர் நகர், நல்லப்பன் தெரு உள்ளிட்ட பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டு விநாயகர் சிலைகளை ஆற்றில் விசர்ஜனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details