தமிழ்நாடு

tamil nadu

குன்னூர் சாலையில் வாக்கிங் போன யானைக்கூட்டம்!

By

Published : Nov 21, 2019, 2:14 PM IST

நீலகிரி: குன்னூர் பகுதியில் பெய்த மழையைத் தொடர்ந்து சமவெளிப் பகுதியிலிருந்து கேஎன்ஆர் பகுதிக்கு யானைகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றன.

group of the elephant cross the road in coonoor

குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் அப்பகுதியில் பசுமை திரும்பியுள்ளது. இதனால் காட்டு யானைகள் சமவெளிப் பகுதியில் இருந்து கேஎன்ஆர் வனப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றன. இவ்வாறு வரக்கூடிய யானைகள் சாலைகளில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன.

அவ்வப்போது, சாலைகளில் இரண்டு சக்கர வாகனங்களில் வருவோர்களையும் யானைக்கூட்டம் விரட்டி வருகிறது. சாலைகளில் யானைகள் கூட்டமாகக் கடந்து செல்வதால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகின்றனர்.

சாலையைக் கடக்கும் யானைக்கூட்டம்

மேலும், இதுபோன்று யானைகள் கூட்டமாகச் செல்லும் போது, சுற்றுலாப்பயணிகள் ஆபத்தை உணர்ந்து புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க:கவுண்டம்பாளையத்தில் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்தை கொள்ளை!

Intro:குன்னூர்‌ மலைப்பாதையில் யானைகள் கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்.
நீலகிரி மாவட்டம் 65சதவிகிதம்‌ வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையால் பசுமை திரும்பியுள்ளது. இதனால் யானைகளுக்கு போதுமான உணவு மற்றும் தண்ணீர் எளிதில் கிடைப்பதால் சமவெளி பகுதியில் இருந்து குன்னூர் கேஎன்ஆர் பகுதிக்கு படையொடுத்து வருகின்றன. இவ்வாறு வரக்கூடிய யானைகள் சாலையில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது. இரண்டுச்சக்கர வாகனங்களில் வருவோர்களை விரட்டியும் வருகிறது. இதே போன்று அந்த பகுதியில் அரசு மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் யானை கூட்டத்தை கண்டு புகைப்படங்கள் மற்றும்‌ செல்ஃபி போன்ற‌ செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை யானை தாக்கி உயிரிக்கும் சூழல் நிலவி வருகிறது. எனவே வனத்துறையினர் ‌நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
....Body:குன்னூர்‌ மலைப்பாதையில் யானைகள் கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்.
நீலகிரி மாவட்டம் 65சதவிகிதம்‌ வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையால் பசுமை திரும்பியுள்ளது. இதனால் யானைகளுக்கு போதுமான உணவு மற்றும் தண்ணீர் எளிதில் கிடைப்பதால் சமவெளி பகுதியில் இருந்து குன்னூர் கேஎன்ஆர் பகுதிக்கு படையொடுத்து வருகின்றன. இவ்வாறு வரக்கூடிய யானைகள் சாலையில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது. இரண்டுச்சக்கர வாகனங்களில் வருவோர்களை விரட்டியும் வருகிறது. இதே போன்று அந்த பகுதியில் அரசு மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் யானை கூட்டத்தை கண்டு புகைப்படங்கள் மற்றும்‌ செல்ஃபி போன்ற‌ செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை யானை தாக்கி உயிரிக்கும் சூழல் நிலவி வருகிறது. எனவே வனத்துறையினர் ‌நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
....Conclusion:

ABOUT THE AUTHOR

...view details