தமிழ்நாடு

tamil nadu

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உதவிய மக்களுக்கு அரசு உதவிகள்!

By

Published : Dec 17, 2022, 6:20 PM IST

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தின் போது அங்கு இருந்தவர்களுக்கு உதவிய நஞ்சப்ப சத்திரம் பகுதி மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உதவி மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்

நீலகிரி: குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர், கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி ஹெலிகாப்டடில் புறப்பட்டனர். அப்போது குன்னூட் அருகே நஞ்சப்பா சத்திரத்தில் கடும் மேகமூட்டம் நிலவியதில், ஹெலிகாப்டர் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் முப்படை தளவதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் செல்வதற்கு முன்பு, நஞ்சப்பா சத்திரம் பகுதி மக்கள் உடனடியாக சென்று அங்கு இருந்தவர்களுக்கு உதவினர். இதனை பாராட்டிய அரசு, அப்பகுதி மக்களுக்கு அரசு நலதிட்ட உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. அந்த வகையில், இன்று (டிசம்பர் 17) அப்பகுதி மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் பயனாளிகளுக்கு இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்கள், அங்கன்வாடி குழந்தைகளுக்கு நாற்காலிகள் மற்றும் பொருள்கள், மகளிர் சுய உதவிக் குழுவிற்குக் கடன் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, குடும்ப அட்டை பெறாதவர்களுக்கு குடும்ப அட்டை, வயதானவர்களுக்கு வளர்ப்பதற்கு நாட்டுக்கோழிகள் போன்றவற்றை சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதாநேரு, வண்டிசோலை ஊராட்சி தலைவர் மஞ்சுளா சதிஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: கள்ளர் வெட்டு திருவிழா கோலாகலம்.. மண்ணை எடுக்க முண்டியடித்த பக்தர்கள்..

ABOUT THE AUTHOR

...view details