தமிழ்நாடு

tamil nadu

குன்னூரில் யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறை அலுவலருக்கு படுகாயம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 12:13 PM IST

Coonoor Elephant Attack: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டு யானைகளை விரட்டும் பணியின்போது வனத்துறையின் வேட்டைத் தடுப்பு காவலர் படுகாயம் அடைந்து, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Coonoor Elephant Attack
குன்னூரில் குட்டியுடன் சுற்றித் திரியும் காட்டு யானைகள்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த ஒரு மாத காலமாக குட்டியுடன் கூடிய எட்டு காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள கிளன்டேல் எஸ்டேட் பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்டிருந்த காட்டு யானைகளை, வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று (ஜன.11) இரவு திடீரென இரண்டு காட்டு யானைகள் திரும்பி, வனத்துறையினரை விரட்ட ஆரம்பித்தது. இதில் வேட்டைத் தடுப்புக் காவலர் லோகேஷ்வரன் (40) படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து, உடனடியாக அவர் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு லோகேஸ்வரனை வனத்துறை வாகனம் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியதை அடுத்து, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்துள்ளனர். தற்போது வேட்டைத் தடுப்புக் காவலர் லோகேஷ்வரனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், குட்டிகளுடன் உள்ள காட்டு யானைகளின் அருகில் செல்ல வேண்டாம் என்றும், யானைகளின் மீது கற்களைக் கொண்டு தாக்குவதால், யானைகள் ஆக்ரோஷமாக மனிதர்களைத் தாக்கும் என்றும் வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இதுமட்டுமல்லாது, யானைகள் விரைவில் அடர்ந்த வனப் பகுதிகளுக்கு விரட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தரப்பில் பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தென்காசியில் 300 சீர்வரிசைகளுடன் சமத்துவப் பொங்கலை கொண்டாடிய ராணிகள்!

ABOUT THE AUTHOR

...view details