தமிழ்நாடு

tamil nadu

ட்ரோன் கேமரா மூலம் யானை கண்காணிப்பு

By

Published : Aug 4, 2021, 10:49 PM IST

முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டு 24 மணி நேரத்தில் மீண்டும் வனப்பகுதி வழியாக மசினகுடி அருகே திரும்பிவந்த யானையை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ட்ரோன் கேமரா மூலம் யானை கண்காணிப்பு
ட்ரோன் கேமரா மூலம் யானை கண்காணிப்பு

நீலகிரி: உதகை அருகே உள்ள வாழைத்தோட்டம், மாவனல்லா உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக 'ரிவால்டோ' என்ற காட்டு யானை சுற்றித் திரிந்து வந்தது.

தும்பிக்கையில் காயம் காரணமாகவும், வலது கண் பார்வைக் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் வனப்பகுதிக்குள் செல்லாமல் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்தது.

பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த யானை கடந்த மே மாதம் பிடிக்கப்பட்டு மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.

தொடர்ந்து 90 நாள்கள் அந்த யானை மரக்கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் (ஆக. 02) வனத்துறையின் புதிய முயற்சியாக இந்த யானைக்கு மறுவாழ்வு கொடுக்க முதுமலை அருகே உள்ள சிக்கல்லா வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

மசினகுடி அருகே திரும்பிவந்த யானையை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் காவலர்கள்

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

விடுவிக்கப்பட்ட யானை எங்கு செல்கிறது? என்பதை கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிக்க ஒரு குழுவும் அதற்காக அமைக்கப்பட்டது. ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்கப்பட்டுவந்த 24 மணி நேரத்தில் 35 கிலோமீட்டர் நடந்து, தற்போது 'ரிவால்டோ' யானை மசினகுடியை நோக்கி வனப்பகுதி வழியாக வரத்தொடங்கியுள்ளது.

எனவே, யானையை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறை கண்காணிதத்து வருகிறது. தற்போது யானை மசினகுடி அருகே குறும்பர் பாடி வனப்பகுதியில் உள்ளதால், எப்போது வேண்டுமென்றாலும் குடியிருப்புப் பகுதிக்கு வரக்கூடும். எனவே, பொதுமக்கள் யானைக்கு உணவு வழங்குவது, புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: 'யானைகளின் அருகே சென்று செல்ஃபி - எச்சரிக்கும் வனத்துறை'

ABOUT THE AUTHOR

...view details