தமிழ்நாடு

tamil nadu

நீலகிரியில் கடும் பனிப்பொழிவால் கருகி வரும் பயிர்கள்; விவசாயிகள் வேதனை!

By

Published : Jan 23, 2023, 10:00 PM IST

நீலகிரி குன்னூர் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக பயிர்கள் கருகி வருவதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நீலகிரியில் கடும் பனிப்பொழிவால் கருகி வரும் பயிர்கள்
நீலகிரியில் கடும் பனிப்பொழிவால் கருகி வரும் பயிர்கள்

பனிப்பொழிவால் கருகி வரும் பயிர்கள்

நீலகிரி: குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக மலை தோட்ட காய்கறிகளும், தேயிலை விவசாயமும் கருகி பெரிதும் பாதிப்பு அடைந்து உள்ளது. ஜனவரி முதல் பிப்ரவரி வரையில் பனிப் பொழிவு அதிகம் காணப்படுவதால் பசுந்தேயிலை பாதிப்படைந்து வருகிறது.

இதனால் தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. மேலும் மலை தோட்ட காய்கறிகள், மேரக்காய் செடிகளும் கருகி உள்ளது. இதே போன்று பேரிக்காய் மரங்களும் பனிப்பொழிவின் தாக்கத்தால் காய்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய நிதியுதவி வழங்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:நீலகிரியில் கடும் உறைபனி...தட்டுகளில் இருந்த தண்ணீர் ஐஸ் கட்டியாக மாறியது

ABOUT THE AUTHOR

...view details