தமிழ்நாடு

tamil nadu

தொடர் கனமழை எதிரொலி - குன்னூர் மலை ரயில் சேவை நிறுத்தம்

By

Published : Aug 11, 2019, 6:46 AM IST

நீலகிரி: தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைப்பதற்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்படும் மலை ரயில் சேவை இன்று முதல் மூன்று நாட்களுக்கு நிறுத்தப்படுகிறது.

train

நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் கடந்த ஒருவாரக் காலமாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மலை ரயில் பாதையிலும் ஆங்கங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் சீரமைப்பு பணிகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டுகிறது. எனவே தொடர் கனமழை காரணமாக ரயில் பாதையை சீரமைப்பதற்காக இன்று தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு (ஆகஸ்ட் 11, 12, 13) மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான மலைரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Intro:நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் மலை ரயில் உலகப்பிரசித்தி பெற்றதாகும் இந்த மலை ரயிலில் ஆங்கிலேயர்களால் 1899 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்பட்டது இதனை அடுத்து 1908ஆம் ஆண்டு உதகை வரை நீட்டிக்கப்பட்டது ஆசியாவிலேயே 22 கிலோ மீட்டர் மலைப்பாதையில் பற்சக்கரங்களைக் கொண்டு இயக்கப்படும் ஒரே மலை ரயில் என்ற பெருமைக்குரியது இந்த ரயிலில் 208 பாலங்கள் பதினாறு குகைகள் வழியாக மலை ரயிலில் பயணிப்பது சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக உள்ளது தற்போது நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலை ரயில் பாதையில் அங்கங்கே மண் சரிவும் பாறைகளும் விழுந்து வருகின்றன இதன் காரணமாக சீரமைப்பு பணிகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் ஆகஸ்ட் 11 12 13 ஆகிய மூன்று நாட்கள் தொடர் மழை காரணமாக ரயில் பாதையை சீரமைப்பு அதற்காகவும் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்


Body:நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் மலை ரயில் உலகப்பிரசித்தி பெற்றதாகும் இந்த மலை ரயிலில் ஆங்கிலேயர்களால் 1899 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்பட்டது இதனை அடுத்து 1908ஆம் ஆண்டு உதகை வரை நீட்டிக்கப்பட்டது ஆசியாவிலேயே 22 கிலோ மீட்டர் மலைப்பாதையில் பற்சக்கரங்களைக் கொண்டு இயக்கப்படும் ஒரே மலை ரயில் என்ற பெருமைக்குரியது இந்த ரயிலில் 208 பாலங்கள் பதினாறு குகைகள் வழியாக மலை ரயிலில் பயணிப்பது சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக உள்ளது தற்போது நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலை ரயில் பாதையில் அங்கங்கே மண் சரிவும் பாறைகளும் விழுந்து வருகின்றன இதன் காரணமாக சீரமைப்பு பணிகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் ஆகஸ்ட் 11 12 13 ஆகிய மூன்று நாட்கள் தொடர் மழை காரணமாக ரயில் பாதையை சீரமைப்பு அதற்காகவும் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details