தமிழ்நாடு

tamil nadu

தொட்டபெட்டா சிகரத்தில் தேசிய கொடியை அசைத்து தேசபற்றை வெளிப்படுத்திய ராணுவ குழு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 12:54 PM IST

Hoisted the national flag at Doddabetta peak: இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை முன்னிட்டு தமிழகத்தின் உயரமான சிகரமான தொட்டபெட்டா சிகரத்தில் கர்னல் ரன்வீர் சிங் ஜாம்வால் தலைமையில் 15 பேர் அடங்கிய ராணுவ குழுவினர் தேசிய கொடியை அசைத்து தேசபற்றை வெளிப்படுத்தினர்.

தொட்டபெட்டா சிகரத்தில் தேசிய கொடியை அசைத்து தேசபற்றை வெளிப்படுத்திய இராணுவ குழு!
தொட்டபெட்டா சிகரத்தில் தேசிய கொடியை அசைத்து தேசபற்றை வெளிப்படுத்திய இராணுவ குழு!

தொட்டபெட்டா சிகரத்தில் தேசிய கொடியை அசைத்து தேசபற்றை வெளிப்படுத்திய இராணுவ குழு!

நீலகிரி:இந்தியா சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு தமிழகத்தின் உயரமான சிகரமான உதகை தொட்டபெட்டா சிகரத்தில் கர்னல் ரன்வீர் சிங் ஜாம்வால் தலைமையில் 15 பேர் அடங்கிய ராணுவ குழுவினர் தேசிய கொடியை அசைத்து தேசபற்றை வெளிப்படுத்தினர். இந்தியா சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ‘ஹர் ஷிகர் திரங்கா’ என்ற பெயரில் முதன்முறையாக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மிக உயரமான இடத்தில் தேசியக் கொடியை ஏற்ற திட்டமிடப்பட்டது. இதற்காக கர்னல் ரன்வீர் சிங் ஜாம்வால் தலைமையில் 15 பேர் அடங்கிய இராணுவ குழுவினர் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கர்னல் ரன்வீர் சிங் ஜாம்வால் 50க்கும் மேற்பட்ட வெற்றிகரமான மலை பயணங்கள் மேற்கொண்டுள்ளார்.

மேலும் இவர் எவரெஸ்ட் சிகரத்தில் மூன்று முறை ஏறி சாதனை புரிந்தவர். உலகில் உள்ள ஏழு கண்டங்களின் உயரமான இடங்களைத் தொட்ட ஒரே இந்தியர் இவரே ஆவார். இந்த நிலையில் மிஷன் ஹர் ஷிகர் திரங்காவின் முதலாவது பயணத்தை கடந்த மே மாதம் அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து துவங்கினர். இதனை அடுத்து இந்த குழுவினர் 18 வது மாநிலமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள மலையனகிரி சென்றடைந்தனர்.

19வது மாநிலமாக தமிழகத்தில் உள்ள மிக உயரமான சிகரமான தொட்டபெட்டா சிகரத்திற்கு வந்தனர். கடல் மட்டத்திலிருந்து சுமார் 2 ஆயிரத்து 623 மீட்டர் உயரத்தில் உள்ள தொட்டபெட்டா சிகரத்தில் கர்னல் ரன்வீர் சிங் ஜாம்வால் தலைமையிலான இராணுவ வீரர்கள் தேசிய கொடியை பறக்க விட்டனர். இந்த நிகழ்வில் தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர். அப்போது தேசியக் கொடிகளை உயர்த்திய படி ‘பாரத் மாதா கீ ஜே , வந்தே மாதரம்’ என கம்பீர கோஷங்களையும் எழுப்பினர்.

இதன் பின்னர் 20வது மாநிலமாக கேரளா மாநிலத்தில் உள்ள ஆனைமுடி சிகரத்திற்கு அந்த குழுவினர் புறப்பட்டு சென்றனர். இறுதியாக அக்டோபர் மாதம் சிக்கிமில் உள்ள ஜாங்சாங் மலையில் இந்தக் குழுவினரின் பயணம் முடிவடைய உள்ளது. முன்னதாக தொட்டபெட்டா மலைச்சிகரம் வந்த இந்த இராணுவ குழுவினரை தோடர் பழங்குடியின பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து தேச பக்தி பாடல்கள் பாடி பாரம்பரிய நடனமாடி வரவேற்றனர்.

மேலும் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் இராணுவ குழுவின் இந்த முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க:ரூ.10 கோடியில் ஊட்டி படகு இல்ல ஏரி தூர்வாரப்படும்: அதிகாரிகள் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details