தமிழ்நாடு

tamil nadu

பிபின் ராவத் வீர மரணம்: இராணுவ அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

By

Published : Dec 9, 2021, 6:31 AM IST

வெலிங்டன் இராணுவ அலுவலக கல்லூரியில் இராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்து விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும், இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு மாநில அரசின் சார்பில் அனைத்து உதவிகளையும் வழங்கிட உறுதியளித்துள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்து
ஹெலிகாப்டர் விபத்து

கோயம்புத்தூர்மாவட்டம், சூலூரில் இருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டன் நோக்கி நேற்று (டிசம்பர் 8) விமானப்படைக்குச் சொந்தமான மிக்-17வி5 ரக ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ உயர் அலுவலர்கள் உள்பட 14 பேர் பயணித்தனர்.

குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.

முதலமைச்சர்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் குறித்து தகவல் அறிந்ததும், மீட்புப் பணிகளை முடக்கி விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவ உதவிகளை மேற்கொள்ள மருத்துவக் குழுக்களையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

இராணுவ அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறை உயர் அலுவலர்களுடன் தொலைபேசி வாயிலாக கள நிலவரங்களை கேட்டறிந்தார். அப்போது, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்து

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

வெலிங்டன் இராணுவ அலுவலகத்தில் ஸ்டாலின்

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் தனி விமானம் மூலம் கோவை வந்தர். அதனையடுத்து, சாலை மார்க்கமாக குன்னூர் விரைந்தார். அதன் பிறகு, வெலிங்டன் இராணுவ அலுவலக கல்லூரியில் இராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்து விபத்து குறித்து கேட்டறிந்தார்.

எனது வீர வணக்கத்தைச் செலுத்துகிறேன்

வீர வணக்கம்

வெலிங்டன் இராணுவ அலுவலகத்தில்

அங்கு இராணுவ பதிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை பதிவு செய்தார். அந்த குறிப்பில், "தாய் திருநாட்டின் வீரதிருமகன் விபத்தில் உயிர் இழந்ததற்கு நாடு பெறுகிற துன்பத்தில் நானும் இணைந்து எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வீரமகனுக்கு வணக்கமும் அஞ்சலியும்

இராணுவ அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், "முப்படைகளின் தலைமைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய செய்தி அறிந்ததுமே குன்னூருக்கு விரைந்து இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு மாநில அரசின் சார்பில் அனைத்து உதவிகளையும் வழங்க உறுதியளித்துள்ளேன். நாட்டுப் பணியில் துஞ்சிய வீரமகனுக்கு வணக்கமும் அஞ்சலியும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனையின் போது லெப்டினல் கர்னல் ஹாலன், தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் கேஎன்.நேரு, இராமச்சந்திரன், வெள்ளகோவில் சாமிநாதன், டிஜிபி சைலேந்திரபாபு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அமிரீத் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details