தமிழ்நாடு

tamil nadu

அண்ணனை கொலை செய்த தம்பி கைது!

By

Published : Sep 19, 2020, 5:53 PM IST

குடிபோதையில் மரக்கட்டையால் அண்ணனை தம்பி தாக்கியதில், அவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அண்ணனை கொலை செய்த தம்பி கைது
அண்ணனை கொலை செய்த தம்பி கைது

தஞ்சாவூர்:குடிபோதையில் மரக்கட்டையால் அண்ணனை தம்பி தாக்கியதில், அவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள கீழசெம்பாலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ (55). இவரது தம்பி சண்முகவேல் (52). இருவருக்கும் நேற்று (செப் 18) இரவு குடிபோதையில் தகராறு நடந்தது. இத்தகராறில் சண்முகவேல் மரத்தடியால் இளங்கோவின் தலையில் பலமாக அடித்துள்ளார்.

பலத்த காயமடைந்த இளங்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பட்டுக்கோட்டை காவல் துறையினர், இளங்கோவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆசிரியரின் தாலிச் செயினை பறிக்க முயன்ற பெண் - வெளியான சிசிடிவி வீடியோ

ABOUT THE AUTHOR

...view details