தமிழ்நாடு

tamil nadu

கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி!

By

Published : Jul 2, 2020, 10:54 AM IST

தஞ்சாவூர்: கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி வழக்கில் தலைமறைவாகயிருந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

wife-murdered-her-husband-case
wife-murdered-her-husband-case

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வல்லம் மேம்பாலத்தில் ஜூன் 25ஆம் தேதி காரில் சென்று கொண்டிருந்த காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த யூசுப் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

அதுகுறித்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திவந்தனர். அந்த விசாரணையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருச்சியைச் சேர்ந்த சகாதேவன்(26), பிரகாஷ்(24) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

கொலை செய்யப்பட்டவரின் மனைவி அசீலா

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கொலை செய்யப்பட்ட யூசுப்பின் மனைவி அசீலா (37) என்பவரே கூலிப்படையினரை வைத்து அவரை கொலை செய்திருப்பதும் மேலும் 4 பேருக்கு கொலையில் தொடர்பிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டன.

அதையடுத்து காவல்துறையினர் சகாதேவன்(26), பிரகாஷ்(24), அசீலா(37) மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாகயிருந்த கேசவன் (28), சந்துரு(21) , ஆறுமுகம் (21) , பித்துக்குளி கார்த்திக்(26) ஆகியோர் நேற்று (ஜூலை 1) கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய பட்டாக் கத்திகள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க:முன்னாள் சூதாட்ட கிளப் உரிமையாளர் கத்தியால் குத்தி கொலை - காவல்துறை விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details