தமிழ்நாடு

tamil nadu

ஹெல்மெட் அணிந்தால் வெள்ளி காயின்.. தஞ்சை மக்களுக்கு பரிசு மழை.. டிராஃபிக் போலீஸ் புதிய ஐடியா!

By

Published : Jun 2, 2023, 5:32 PM IST

தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்த பெண்களுக்கு போக்குவரத்து காவல் துறையினர் வெள்ளி நாணயத்தை பரிசளித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தஞ்சையில் ஹெல்மெட்  அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சாவூர்:தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகத் தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்த பெண்களுக்குக் காவல் துறையினர் வெள்ளி நாணயத்தைப் பரிசளித்து, வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். தஞ்சை மாவட்டத்தில் 100 சதவீதம் ஹெல்மெட் அணிவதை உறுதிப்படுத்தும் வகையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பேரணிகள் காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனமான ஜோதி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாகப் பெண்கள் ஹெல்மெட் அணிவதை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து போலீசார் இரண்டு சக்கர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டிவந்த பெண்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது தாங்கள் ஹெல்மெட் அணிந்து இருக்கிறோம் எதற்கு போலீசார் நிறுத்துகிறார்கள் என அச்சத்துடன் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தினர்.

அப்போது அவர்களிடம் வெள்ளி நாணயத்தைப் போக்குவரத்து காவல் துறை அதிகாரி மற்றும் அவரது குழுவினர் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளி நாணயத்தைப் பரிசளித்தனர். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு காவல் துறையினர் பரிசு அளித்ததுடன் அவர்களை மேலும் ஊக்கிவிக்கும் வகையில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி வந்ததற்கு தங்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கீழே கிடந்த 7 சவரன் நகை.. போலீசிடம் ஒப்படைத்த நபருக்கு குவியும் வாழ்த்து!

மேலும் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரிடம் இரண்டு சக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை தெரிவித்ததுடன் பாதுகாப்பாக வாகனம் ஓட்ட பெண்களும் எடுத்துரைக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டனர். காவல் துறையின் இந்த திடீர் தொடக்கம் அப்பகுதி பெண் வாகன ஓட்டிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் வெள்ளி நாணயம் பெற்ற பெண்கள் பெரும் மகிழ்ச்சியுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைப்போல் கடந்த மாதம் ஹெல்மெட் அணிந்து வந்த மகளிர்க்கு ஒரு லிட்டர் பெட்ரோலை இலவசமாக போலீசார் வழங்கினர். மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மகளிர்க்குக் கோலப் போட்டி நடத்தி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்திய நிலையில் பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையான அறிவுறுத்தல்களால் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கன்னியாகுமரி விரைவு ரயிலை கவிழ்க்க சதி?... திருச்சி அருகே நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details