தமிழ்நாடு

tamil nadu

அமைச்சர் சேகர்பாபு அழுத்தத்தால் திருநாகேஸ்வரம் கோயில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தி வைப்பு - தாமரைச்செல்வன்

By

Published : Aug 1, 2023, 3:34 PM IST

நாகநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நீதிமன்ற உத்தரவுப்படி தொடங்கிய நிலையில் அமைச்சர் சேகர்பாபுவின் பரிந்துரையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திமுக பேரூர் கழக செயலாளர் தாமரைச்செல்வன் கூறினார்

Etv Bharat
Etv Bharat

அமைச்சர் சேகர்பாபு அழுத்தத்தால் திருநாகேஸ்வரம் கோயில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தி வைப்பு

தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ளது நாகநாதசுவாமி திருக்கோயில். இது நவக்கிரகங்களில் ராகு பகவானுக்குரிய பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோயிலுக்கு சொந்தமான சுமார் ஒரு கோடி மதிப்பிலான சுமார் 90 ஆயிரம் சதுர அடி இடத்தில் உள்ள 39 வீடுகளை நீதிமன்ற உத்தரவுப்படி அதிரடியாக அகற்றிட வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உதவியுடன் கோயில் நிர்வாகம் இன்று காலை 8 மணி முதல் கோயிலில் தயார் நிலையில் இருந்தனர்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன், இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நிறுத்தி வைக்க அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவரின் ஒப்புதலின் பேரில் இன்று நடைபெற இருந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த திருநாகேஸ்வரம் பேரூர் திமுக கழக செயலாளர் தாமரைச்செல்வன் பேட்டியளித்தார்

இதையும் படிங்க: தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.133 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கிவைத்த முதலமைச்சர்

இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறும் போது, இது நத்தம் புறம்போக்கு தான் இதில் கோயில் உரிமை கொண்டாட முடியாது என்றும், திடீரென எங்களை காலி செய்ய சொன்னால் எங்கள் குடும்பத்துடன் நாங்கள் எங்கே செல்வது என கண்ணீர் மல்க தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் விஷயத்தில், அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும், அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, இன்று நிறுத்தி வைக்கப்பட்ட ஆக்கிரமிப்பை நீதிமன்ற உத்தரவுபடி அகற்றிட இசைவு தெரிவிப்பாரா அல்லது எம்எல்ஏ அன்பழகன் கோரிக்கை ஏற்று இதனை கைவிடச் செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: ‘தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்’ - தஞ்சையில் தென்னை விவசாயிகள் பேரணி!

ABOUT THE AUTHOR

...view details