தமிழ்நாடு

tamil nadu

தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு: ஓட்டுநர் கைது

By

Published : Jan 13, 2021, 12:11 PM IST

தஞ்சாவூர்: சாலையோர மின்கம்பியில் தனியார் பேருந்து உரசி 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

thirukkattuppalli private bus accident
தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், கல்லணையில் இருந்து மன்னார்குடிக்கு வரகூர் வழியாகச் சென்ற தனியார் பேருந்து, நேற்று காலை (ஜன.12) எதிரில் வந்த லாரிக்கு வழிவிட ஒதுங்கியது. அப்போது சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட இடத்தில் பேருந்தின் சக்கரங்கள் சிக்கவே, ஒருபுறமாக பேருந்து சாய்ந்துள்ளது.

இதில் எதிர்பாராத விதமாக பேருந்து மின்கம்பியில் உரசியது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே வரகூர் பகுதியைச் சேர்ந்த கல்யாணராமன் (55), கருப்பூர் பகுதி கணேசன் (50), அரியலூர் நடராஜன் (45) உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். செந்தலை பகுதி முனியம்மாள் (60), மணத்திடல் பகுதி செபஸ்டின் (எ) அம்புரோஸ் (31), வளப்பக்குடி லூர்து சேவியர் (42) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர், மூவரையும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நான்கு பேரின் உடல்களையும் உடற்கூராய்வுக்காக திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இது தொடர்பாக விஏஓ பஜாஜ் ராஜ் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதேவி, தனியார் பேருந்து ஓட்டுநர் ஜான்பிலோமின் ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:மின்கம்பி மீது தனியார் பேருந்து உரசி விபத்து: 4 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details