தமிழ்நாடு

tamil nadu

ஜேஎன்யு விவகாரம்: தஞ்சை மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டம்

By

Published : Jan 8, 2020, 10:57 AM IST

தஞ்சாவூர்: ஜேஎன்யு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சையில் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

students protest
students protest

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், ஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் செய்தனர்.

குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டம்

அப்போது, கல்லூரி நுழைவாயில் முன்பு அமர்ந்து டெல்லி தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பேராசிரியர்கள் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாணவிகள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க...

பிரபல ஓவியக் கலைஞர் ஈஷா யோகா மையத்தில் மரணம்!

Intro:தஞ்சாவூர் ஜன 07


டெல்லி ஜவர்கலால் நேரு பல்கலைக்கழக மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சையில் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு செய்து போராட்டம்Body:.

நேற்று முன்தினம் இரவு டெல்லி ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதிக்குள் புகுந்து முகமூடி அணிந்த ரவுடிகள் மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ்யை தாக்கினர் இதில் 30 மாணவர்களும் பதினொரு பேராசிரியர்களும் காயமடைந்தனர் இந்த சம்பவத்தை கண்டித்து நாடெங்கும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரி போராட்டத்தில் ஈடுபட்ட அதேபோல தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து வாயில் முன்பு அமர்ந்து டெல்லி சம்பவத்தை கண்டித்தும் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர் பின்னர் பேராசிரியர்கள் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மாணவிகள் கலந்து சென்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யவில்லை என்றால் போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்தனர்.

Conclusion:Tanjore sudhakaran 9976644011

ABOUT THE AUTHOR

...view details