தமிழ்நாடு

tamil nadu

ஒரத்தநாட்டில் வரும் 4-ம் தேதி ஈபிஎஸ் தலைமையில் பொதுக்கூட்டம், ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்திற்கு செக்

By

Published : Apr 23, 2023, 1:19 PM IST

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதியில் வரும் 4ஆம் தேதி ஈபிஎஸ் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது என முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

TN TNJ ADMK EX MINISTER KAMARAJ BYTE
TN TNJ ADMK EX MINISTER KAMARAJ BYTE

தஞ்சை:தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசும்போது, ''முழுமையாக இரண்டு ஆண்டுகள் முடியாத நிலையில் திமுக ஆட்சி எப்போது செல்லும் என்று மக்கள் கேட்கின்றனர். அதிமுக ஆட்சியை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக எதிர்க்கட்சி, திமுகவை எதிர்த்து தான் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். எதிர்க்கட்சி திமுக என்பதில் ஈபிஎஸ் உறுதியாக உள்ளார்.

ஆனால், ஓபிஎஸ் போல் கும்பிடு போட்டு கொண்டு இருக்கமாட்டார். உறுதியான தலைவராக ஈபிஎஸ் உள்ளதால் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்'' என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ''அதிமுகவில் இணைகிறவர்களை இணைப்பதற்காக மே மாதம் 4-ம் தேதி ஒரத்தநாட்டில் ஈபிஎஸ் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக ஈபிஎஸ் தலைமையில் தான் உள்ளது. தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் கட்சி கொடியையும் சின்னத்தையும் பயன்படுத்துவோம் என்று தெரிவிப்பது நியாயத்திற்கும் தர்மத்திற்கும் புறம்பானது. சட்டரீதியாக அதை சந்திப்போம். அதிமுக சின்னத்தையும் கொடியையும் வேறு யாரேனும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.

மேலும் ஓபிஎஸ் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு எடுப்பவர். ஒரே நிலைப்பாடு கொண்டவர் இல்லை. அதிமுக ஆட்சியைப் பற்றி குறைவாகப் பேசியவர்கள், இன்றைக்கு எல்லா மக்களாலும் பேசப்படுகிறார்கள். நடவடிக்கை இல்லை. மக்களுக்குத் தேவையான எதையும் செய்யவில்லை. ஆனால் அவர்களுக்கு போக வேண்டிய பணம் சரியாகப் போகிறது'' என்று திமுகவை குற்றம்சாட்டினார்.

முன்னதாக அதிமுக கட்சியில் பல்வேறு உறுப்பினர்கள் இணைந்தனர். இக்கூட்டத்தில் அவைத்தலைவர் திருஞானசம்பந்தம், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், பால்வளத்தலைவர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவராக இருந்த சேகர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து பிரிந்து இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுகவில் ஈபிஎஸ் தலைமையில் இணைந்தார். ஓபிஎஸ் ஆதரவாளரான ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏ வைத்திலிங்கத்தை ஓரம் கட்டும் முயற்சியாக அவருக்கு செக் வைக்கும் வகையில் ஈபிஎஸ் தலைமையில் வரும் 4ஆம் தேதி ஒரத்தநாட்டில் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது என நிர்வாகிகளால் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம்; ஆளுநரை சந்திக்க பாஜக திட்டம்!

இதையும் படிங்க: யார் இந்த அம்ரித் பால் சிங்? வாரீஸ் டி பஞ்சாப் என்றால் என்ன? முழுத் தகவல்கள் இங்கே!

ABOUT THE AUTHOR

...view details